இரட்டை நாகபந்தம் என்றால் என்ன?
Answers
Explanation:
சித்திரக்கவி - இரட்டை நாகபந்தம்
இது சித்திரக்கவியின் வகைகள் பலவற்றுள் ஒன்று. மேலும், அட்டநாகபந்தம்,இரதபந்தம், முரசபந்தம் என பந்த கவிகள் பல வகை உண்டு.
இரட்டை நாக பந்தத்தில் , நேரிசைசிந்தியல் வெண்பா மற்றும் இன்னிசை சிந்தியல் வெண்பா கொண்டு வடித்துள்ளேன்.
நேரிசை வெண்பா:-
செஞ்சடை நாதனை செம்புலத் தாணுவை
விஞ்சிடவே தாரணியில் ஆகாதே - என்றும்தான்
அஞ்சுகம் கொண்டான் தலை.
விளக்கம்:-
செம்மையான சடையும் செம்மையான நிலத்தினை உடயவனுமாகிய ஈசனை விஞ்சிட இப்புவியில் யாராலும் இயலாது. என்றுமே கிளியை(அங்கயற்கண்ணி) கொண்டவனே சிறந்தவன்
இன்னிசை வெண்பா:-
விண்ணவர் தம்மொடு புண்ணிய மாகிய
நற்செஞ் சுடரே கொடுத்திடா யென்றுநான்
பாடுவேன் நாபியில்தே டாததை.
விளக்கம்:-
விண்ணுலகத்தோர் மிகப் புண்ணியமானது என எண்ணும் சுடரோனே!நாபியாகிய மணிபூரகத்தின் உள்ளே தேட இயலாதவற்கு ஒளி அளித்திடுவாயா?.
இரட்டை நாகபந்தம்
நாக பந்தம்
- சித்திர கவி ஆனது ஓவியப்பா எனவும் அழைக்கப்படுகிறது.
- ஓவியப்பாவில் ஒரு வகை நாகபந்தம் ஆகும்.
- இது நாகப்பிணை எனவும் தனித்தமிழ் சொற்களால் குறிப்பிடப்படுகிறது.
- இதில் 2, 4, 8 என நாகப்பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டிருப்பது போல படம் வரைப்படும்.
இரட்டை நாகபந்தம்
- இரட்டை நாகபந்தம் என்பது இரு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விளையாடுவது போல சித்திரம் வரைந்து, அந்த பாம்பின் உருவங்களில் கணக்கிட்ட அறைகளை வகுத்துச் சந்திகளில் நின்ற அறைகளில் பொதுவான எழுத்துகள் அமையப் பாடப்படுவது என அழைக்கப்படுகிறது.
- இரட்டை நாகபந்தம் என்ற பாடல் வகைகளில் பாம்பின் தலைப் பகுதியில் இருந்து தொடங்கி வால் பகுதி வரை சென்று பாடலின் பொருளினை காண வேண்டும்.