ஏகதேச உருவக அணி என்றால் என்ன?
Answers
Answered by
19
Answer:
Explanation:
ஏகதேச உருவக அணி
அணி விளக்கம்
செய்யுளில் கூற எடுத்துக் கொண்ட கருத்துகளுள் ஒன்றை மட்டும் உருவகம் செய்து விட்டு, மற்றொன்றை உருவகம் செய்யாமல் கூறுவது ஏகதேச உருவக அணி என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
பொருள் விளக்கம்
சினம், தன்மை சேர்ந்தாரை அழிக்கும் தன்மை உடையது.
மேலும் அது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தினை சுட்டு அழிக்கும் தன்மை உடையது ஆகும்.
இந்த குறளில் சுற்றத்தார் பாதுகாப்பு தெப்பமாக உருவகம் செய்யப்பட்டு உள்ளார்.
ஆனால் சினம் நெருப்பாக உருவகம் செய்யப்படாததால் இதில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது
Similar questions
Science,
4 months ago
Hindi,
4 months ago
Math,
8 months ago
Social Sciences,
1 year ago
English,
1 year ago