உவமை அணி என்றால் என்ன
Answers
Explanation:
வன்துணைப் பெருந்தம்பி வணங்கலும்
தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்
நின்ற குன்று ஒன்று, நீள் நெடுங் காலொடும்
சென்ற குன்றைத் தழீஇ அன்ன செய்கையான்
(தழீஇஅன்ன-தழுவியது போன்ற)
hope it's correct
teriyale
Answer:
உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது.
சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.
உவமையணி 24 வகைப்படும். அவையாவன:
விரி உவமையணி
தொகை உவமையணி
இதரவிதர உவமையணி
சமுச்சய உவமையணி
உண்மை உவமையணி
மறுபொருள் உவமையணி
புகழ் உவமையணி
நிந்தை உவமையணி
நியம உவமையணி
அநியம உவமையணி
ஐய உவமையணி
தெரிதருதேற்ற உவமையணி
இன்சொல் உவமையணி
விபரீத உவமையணி
இயம்புதல் வேட்கை உவமையணி
பலபொருள் உவமையணி
விகார உவமையணி
மோக உவமையணி
அபூத உவமையணி
பலவயிற்போலி உவமையணி
ஒருவயிற்போலி உவமையணி
கூடா உவமையணி
பொதுநீங்குவமையணி
மாலையுவமையணி
என்பனவாகும் இவையன்றி
பண்பு உவமையணி
தொழில் உவமையணி
பயன் உவமையணி.
சந்தான உவமையணி
ஒப்புவமையணி
விலக்குவமையணி
பண்பு உவமையணி
உதாரணம்: முத்துப்பல், பவளவாய், கயல்விழி
பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.
தொழில் உவமையணி
உதாரணம்: புலிமறவன், குரங்குமனம்
செயலை விளக்குவது
புலியின் வீரம், தாவும் மனம்.
பயன் உவமையணி
உதாரணம்: மழைக்கை
மழை போல பொழியும்(கொடுக்கும்) கை
உவமானம்
ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்
உவமேயம்
ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்
உவம உருபுகள்
ஒப்புவமைப்படுத்துவதற்காக போன்ற என்று பொருள் தரும் சொற்கள் உவம உருபுகள் எனப்படும். உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய, அற்றே
(எ.கா.) உவம உருபு - தொடர்
போல - கிளி போலப் பேசினாள்.
புரைய - வேய்புரை தோள்.
ஒப்ப - தாயொப்ப பேசும் மகள்.
உறழ - முறவு உறழ் தடக்கை.
அன்ன - மல்ரன்ன சேவடி.