புதுக்கவிதையின் உத்திகளைத் தொகுத்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
நீங்க தமிழ் அஹ்
Explanation:
Please mark me as the Brainliest
Answered by
0
புதுக்கவிதையின் உத்திகள்
- உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை மற்றும் இருண்மை முதலியன புதுக்கவிதையின் உத்திகள் ஆகும்.
உவமை
- உவமை என்பது தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளை உணர்த்துவது ஆகும்.
உருவகம்
- உருவகம் என்பது உவமையும் பொருளும் வேறுவேற அல்ல, ஒன்றே எனக் கருதுமாறு செறிவுற அமைவது ஆகும்.
படிமம்
- முற்று உருவகப்பாங்கில் அமைந்து தெளிவானதோர் அகக்காட்சியை வழங்குவது படிமம் என அழைக்கப்படுகிறது.
குறியீடு
- ஒரு குறிப்பிட்ட கருத்தினை சொல்வதற்குப் பதிலாக அந்த கருத்தைத் தன்னகத்தே மறைமுகமாக கொண்ட சொற்கள் அல்லது காட்சிகளை குறியீடாகப் பயன்படுத்தி எழுதப்படும் புதுக்கவிதையின் உத்தி குறியீடு என அழைக்கப்படுகிறது.
அங்கதம்
- அங்கதம் என்பது நகைப்புடன் கூடிய எள்ளல் ஆகும்.
முரண்
- முரண் என்பது ஒன்றுக்கொன்று எதிரானவைகளை கொண்டு அமையும் உத்தி ஆகும்.
சிலேடை
- ஒரு சொல் இரு பொருள்பட வரும் உத்தி சிலேடை ஆகும்.
இருண்மை
- படிப்பவர் தம் அறிவு மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வெவ்வேறு பொருளைத் தரும் புதுக்கவிதையின் உத்தி இருண்மை என அழைக்கப்படுகின்றது.
Similar questions