லிமரிக், லிமரைக்கூ வேறுபடுத்துக.
Answers
Answered by
0
லிமரிக் மற்றும் லிமரைக்கூ இடைய உள்ள வேறுபாடுகள்
லிமரிக்
- லிமரிக் கவிதைகள் ஐந்து அடிகளை கொண்டு இருக்கும்.
- லிமரிக் கவிதைகள் இயைபுக் குறும்பா என அழைக்கப்படுகிறது.
- இவை நகைச்சுவை, எள்ளல் போன்ற கூறுகளை கொண்டு உள்ளன.
(எ.கா)
- முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்
- முன்னாலே வந்து நின்றான் காலன்
- சத்தமின்றி, வந்தவனின்
- கைத் தலத்திற் பத்து முத்தைப்
- பொத்தி வைத்தான் போனான் முச்சூலன்
லிமரைக்கூ
- லிமரைக்கூ கவிதைகள் ஹைக்கூ கவிதைகளை போல மூன்று அடிகளை கொண்டு இருக்கும்.
- லிமரைக்கூ கவிதைகள் இயைபுத் துளிப்பா என அழைக்கப்படுகிறது.
- இவை நகைச்சுவையோடு வாழ்வியலை வெளிப்படுத்துகின்றன.
(எ.கா)
- குழந்தை வளர்ந்த தொட்டில்
- கிழிந்து கந்தல் ஆன பின்னும்
- பாடும் தாய்மை மெட்டில்
Similar questions
English,
4 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago
Hindi,
1 year ago