India Languages, asked by gamerrathish, 8 months ago

"இராமனோடு சீதை வந்தாள்" என்பது ____________. உடன்பாட்டுத் தொடர் வேற்றுமைத் தொடர் எதிர்மறைத் தொடர் எழுவாய்த் தொடர்

Answers

Answered by gunduravimudhiraj76
0

Answer:

2.4 தமிழ்த் தொடர்

சொற்கள் ஒன்றுடன் ஒன்று பொருள் தரும் முறையில் தொடர்வது தொடர் ஆகும். தொடர் வாக்கியம் என்றும் வழங்கப்படுகிறது. தொடர்கள் உருவாக்கப்படும் முறையை ஆய்வது தொடரியல் ஆகும். தமிழைப் பொறுத்த வரை, ‘இந்தச் சொல் இந்தச் சொல்லோடுதான் சேரலாம்’ என்ற நெறிமுறை உண்டு.

2.4.1 தொடர் அமைப்பு

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்ற மூன்று உறுப்புகள் இணைந்து தொடர் அமையும். எழுவாய் என்பது பெயர்ச்சொல். தொடரில் எழுவாய் பெரும்பாலும் முதலில் வரும். பயனிலை என்பது வினைச்சொல், பெயர், வினை என்ற கூறுகள்தாம் எழுவாய், பயனிலை ஆகிய செயல்களை நிகழ்த்துகின்றன. பயனிலை பெரும்பாலும் தொடரின் இறுதியில் வரும். எழுவாய்க்கும், பயனிலைக்கும் இடையில் செயப்படுபொருள் வரும். ஒரு தொடரில் எழுவாய், பயனிலை தவறாது இருக்கும். செயப்படுபொருள் அமையலாம். செயப்படுபொருள் இல்லாமலும் தொடர் அமைவது உண்டு.

கண்ணன் வந்தான் - இத்தொடரில்

கண்ணன் எழுவாய் (பெயர்ச்சொல்)

வந்தான் பயனிலை (வினைச்சொல்)

செயப்படுபொருள்

இடம் பெறவில்லை என்பது குறிக்கத் தக்கது.

முருகன் வள்ளியை மணந்தான் - இத்தொடரில்

முருகன் எழுவாய்

வள்ளியை செயப்படுபொருள்

மணந்தான் பயனிலை

பெயருக்கு முன்னும், வினைக்கு முன்னும் அடைகள் அமைவது உண்டு. அவை பெயரடை, வினையடை எனப்படும்.

நல்ல பையன்

நல்ல - பெயரடை

பையன் - பெயர்

மெல்ல வந்தான்

மெல்ல - வினையடை

வந்தான் - வினை

2.4.2 தொடர் வகைகள்

ஒரு சொல்லே தொடராக அமைதலும் உண்டு. ‘நட’ என்பது ஒரு தொடர். நீ நட என்றால் எழுவாய் + பயனிலை உள்ள தொடர் ஆகிறது. அவன் நடந்தான் என்றால் முற்றுத் தொடர். நடந்த அவன் என்பது எச்சத் தொடர். வந்த வேலன் என்பது பெயர் எச்சத் தொடர். செய்ய வந்தான் என்பது வினை எச்சத் தொடர்.

என்று கூறலாம். தொடர்களை,

தன்வினைத் தொடர் - பிறவினைத் தொடர்,

செய்வினைத் தொடர் - செயப்பாட்டு வினைத்தொடர்,

உடன்பாட்டுத் தொடர் - எதிர்மறைத் தொடர்,

செய்தித் தொடர் - கட்டளைத் தொடர்,

உணர்ச்சித் தொடர் - வினாத் தொடர்.

என்று வகைப்படுத்தலாம். ஒரு தொடரை மற்றொரு வகைத் தொடராக மாற்ற முடியும்.

தன்வினை - பிறவினைத் தொடர்கள்

நான் நேற்று எழுதினேன். தன்வினைத் தொடர்

மாணவர்களை நான் நேற்று எழுத வைத்தேன். பிறவினைத் தொடர்

திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றினார். செய்வினைத் தொடர்

திருவள்ளுவரால் திருக்குறள் இயற்றப்பட்டது. செயப்பாட்டு வினைத் தொடர்

இந்த வகுப்பில் சிலரே நன்றாகப் படிக்கின்றனர். உடன்பாட்டு வினைத் தொடர்

இந்த வகுப்பில் பலர் நன்றாகப் படிக்கவில்லை. எதிர்மறை வினைத் தொடர்

எவரும் வெற்றி பெற விரும்புவர். செய்தித் தொடர்

எவரே வெற்றி பெற விரும்பாதார்! உணர்ச்சித் தொடர்

வெற்றி பெற விரும்பாதார் யார்? வினாத் தொடர்

வெற்றி பெற்றே ஆக வேண்டும். கட்டளைத் தொடர்

தொடர் இலக்கணம்

கீழ்க்காணும் தொடரில் உள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருளைப் பிரித்துக் காண்போமா?.

கண்ணன் என்னை நேற்றுச் சந்தித்தான்.

Similar questions