கதை சொல்லுதலின் நோக்கு நிலையினை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
which language it was...,......
Answered by
0
கதை சொல்லுதலின் நோக்கு நிலை
- கதையின் நிகழ்வுகள் யாருடைய பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது என்பதே நோக்கு நிலை ஆகும்.
- இது இரு வகைப்படும்.
கதை மாந்தர் நோக்கில் சொல்லிச் செல்லும் முறை
- இது கதையினை கதை மாந்தரின் பார்வையில் இருந்து அவர்களின் போக்கு மற்றும் மொழியில் கதையினை நகர்த்திச் செல்லும் முறை ஆகும்.
- இந்த முறையில் கதையில் வரும் ஓர் உறுப்பினரே நான், எனது என்ற பாணியில் கதையினை சொல்லிச் செல்வார்.
கதை ஆசிரியரின் நோக்கில் சொல்லிச் செல்லும் முறை
- கதை மாந்தர்களின் அகமன ஓட்டங்கள், புறச் செயல்பாடுகள் முதலியனவற்றின் மூலமாகவும், கதை மாந்தர்களின் உரையாடல்கள் மற்றும் சூழல் வருணனைகள் மூலமாகவும் கதை ஆசிரியரே கதையினை சொல்லிச் செல்லும் முறை ஆகும்.
Similar questions