கதை சொல்லுதலின் உத்திகளை விளக்குக.
Answers
Answer:
இஃது இயந்திர யுகம். காலமாற்றத்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் வாழ்க்கை எளிதாகி வருகிறது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை மாறி நியூக்ளியார் என்ற தனிக்குடும்பங்கள் மிகுந்த ஆசைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் தத்தளித்து வருகின்றன. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் தாங்கமுடியாத வேலைச்சுமை குடும்பங்களை நெரிக்கிறது. வீடு, அலுவலகம், உறவுகள், சமூகம் போன்றவற்றிற்குப் போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை. இந்த நவீன வாழ்க்கை கொடுக்கக் கூடிய அழுத்தத்தால் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம் நம்மிடையே அருகி விட்டது.
ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு வீடு தான் பள்ளிக்கூடம். காலங்காலமாக நம் வீடுகளில் கதை சொல்வதன் மூலமாகத்தான் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கூட்டுக் குடும்பங்களின் வரமான தாத்தாவும் பாட்டியும் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும்போது கதைகளையும் சேர்த்து ஊட்டினார்கள்.
கதை சொல்லுதலின் உத்திகள்
இயல்பான வரிசையில் சொல்லும் முறை
- இயல்பான வரிசையில் சொல்லும் முறை என்பது கதை நிகழும் வரிசையிலேயே பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு இயல்பாக கதையினை சொல்லும் முறை ஆகும்.
இடையில் பிரித்து சொல்லும் முறை
- இடையில் பிரித்து சொல்லும் முறை என்பது கதையினை சொல்லிச் செல்லும் போது அதன் ஒரு புள்ளியில் உட்சென்று மற்றொரு துணை நிகழ்வினை கூறிவிட்டு, மீண்டும் கதைக்கு வரும் உத்தி ஆகும்.
பின்னோக்கு முறை
- தற்போதைய கதைப் போக்கிற்குக் காரணமாக, முன்பே நடந்த ஒன்றினை சுட்டிக் காட்டி கதையின் வளர்ச்சியினை வலிமையாகக் கொண்டு செல்வது பின்னோக்கு முறை ஆகும்.
முன்னோக்கு முறை
- எதிர் காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை கற்பனையில் எண்ணிப் பார்த்தல் முன்னோக்கு முறை ஆகும்.
காட்சித் துணுக்கு முறை
- காட்சித் துணுக்கு முறை என்பது கடந்த கால நிகழ்வுகளை அல்லது நினைவுகளை புகைப்படப் பிரதிகளை அடுக்கிக் காட்டுவதை போல சொல்லிச் செல்லும் முறை ஆகும்.