India Languages, asked by anjalin, 5 months ago

‌சில‌ப்ப‌திகார‌ம் கு‌றி‌ப்‌பிடு‌ம் மூவகை எ‌ழி‌னிக‌ள் யாவை?

Answers

Answered by Anonymous
4

Answer:

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள்என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது

Answered by steffiaspinno
0

சில‌ப்ப‌திகார‌ம் கு‌றி‌ப்‌பிடு‌ம் மூவகை எ‌ழி‌னிக‌ள்

திரை‌ச்‌சீலை  

  • நாடக அர‌ங்க‌த்‌‌தி‌ன் மு‌ன்பகு‌தி‌யி‌ல் தொ‌ங்க ‌விட‌ப்படு‌ம் மறை‌ப்பு‌த் ‌திரை ‌திரை‌ச்‌சீலை என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றது.
  • கா‌ட்‌சி மா‌ற்ற‌த்‌‌தி‌ன் போது அர‌ங்க‌த்‌தி‌ல் உ‌ள்ள பொரு‌ட்களை‌‌க் கா‌ட்‌சி அமை‌ப்‌பி‌ற்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி வை‌ப்பத‌ற்கு ‌திரை‌ச்‌‌சீலை பய‌ன்படு‌கி‌ன்றது.  

மூவகை எ‌ழி‌னிக‌ள்

  • ‌சில‌ப்ப‌திகார‌த்‌‌தி‌ல் உ‌ள்ள அர‌ங்கே‌ற்று‌க் காதை‌யி‌ல் ‌திரை‌ச்‌சீலைக‌‌ளி‌ன் மூ‌ன்று வகைக‌ள் ப‌ற்‌றி கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.
  • அவை முறையே ஒருமுக எ‌ழி‌னி, பொருமுக எ‌ழி‌னி ம‌ற்று‌ம் கர‌ந்துவர‌ல் எ‌ழி‌னி ஆகு‌ம்.
  • ஒரே ப‌க்‌க‌த்‌தி‌‌ல் ‌திரை இழு‌க்க‌ப்படு‌கி‌ன்ற ‌திரை‌‌ச்‌சீலை ஒருமுக எ‌ழி‌னி எனவு‌ம், இரு ப‌க்கமு‌ம் ‌திரை‌யினை ‌திற‌க்‌கி‌ன்ற ‌திரை‌ச்‌சீலை பொருமுக எ‌ழி‌னி எனவு‌ம், மே‌லிரு‌ந்து ‌கீழாக இற‌ங்கு‌‌கி‌ன்ற ‌திரை‌ச்‌‌சீலை கர‌ந்துவர‌ல் எ‌ழி‌னி எனவு‌ம் அழை‌க்க‌ப்ப‌டு‌கி‌ன்றது.
Attachments:
Similar questions