நாடகத்தின் அகக்கட்டமைப்புகள் குறித்து எழுதுக.
Answers
Answered by
1
நாடகத்தின் அகக் கட்டமைப்புகள்
- நாடகத்தின் அகக் கட்டமைப்புகள் ஆனது தொடக்கம், மோதல், வளர்ச்சி, உச்ச நிலை, வீழ்ச்சி மற்றும் முடிவு என ஆறு வகையாக உள்ளன.
தொடக்கம்
- தொடக்கம் என்பது கருவையும் கதை பாத்திரங்களையும் அறிமுகப்படுத்துவதாகவும், கதைக்கருவுக்குப் பொருத்தமான கேள்வியை எழுப்புவதாகவும் உள்ள நாடகத்தின் முதற்காட்சி ஆகும்.
மோதல்
- நாடகத்தின் வளர்ச்சி நிலைக்கு அடித்தளமாக அமைவது நாடகக் கதை மாந்தர்களிடையே ஏற்படும் முரண்பாடு அல்லது மோதல் ஆகும்.
வளர்ச்சி
- ஒரு நாடகத்தின் கதைக் கருவிற்கு ஏற்பக் காட்சிகளும், கதை மாந்தர்களும் இணைந்து செயல்படுதாக அந்த நாடகத்தின் வளர்ச்சி அமைந்து உள்ளது.
உச்ச நிலை
- வளர்ச்சியை தொடர்ந்து உச்ச நிலை ஏற்படுகிறது.
- உச்சம் என்பது நாடகத்தின் இறுதிக் காட்சி அமைப்பு ஆகும்.
வீழ்ச்சி
- ஒரு நாடகத்தின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிக்கல்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு கதையினை முடிவு நோக்கி கொண்டு செல்வது வீழ்ச்சி ஆகும்.
முடிவு
- ஒரு நாடகத்தின் முடிவு பார்வையாளர் எதிர்பாராத ஒன்றாக அமைதல் வேண்டும்.
Similar questions
Social Sciences,
3 months ago
Math,
3 months ago
Math,
3 months ago
Social Sciences,
7 months ago
Math,
7 months ago
English,
11 months ago
Math,
11 months ago
Math,
11 months ago