தெருக்கூத்து என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
இத்தகு அருமியக் கலையை அறியாதோன் யார்? இதிகாச கதைகள் , கிராமிய கதைகள் , செய்யுள் கதைகள் , நடனங்கள், ஊர் வரலாறு , போன்றவற்றை கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப வேடமிட்டு தெருக்களில் மேடையமைத்து நாடகம் புரிவது , தெருக்கூத்து என்பர்.இது , நாடகத்தமிழில் அடங்கும். இது தமிழுக்குரிய கலை.
Answered by
0
தெருக்கூத்து
- கூத்துக் கலை ஆனது தமிழகத்தின் மிகத் தொன்மையான கலை வடிவங்களில் ஒன்று ஆகும்.
- கூத்துக் கலை ஆனது பார்வையாளர்களுக்கு கதை சொல்லல், நடித்தல், ஆடல், பாடல் போன்ற பல கலைத் தன்மைகளை கொண்ட ஒரு கலை வடிவமாக உள்ளது.
- கூத்துக் கலை ஆனது தெருவில் நடத்தப்படும் கூத்து என்பதினால் தெருக்கூத்து என அழைக்கப்படுகின்றது.
- தமிழ்ப் பண்பாட்டில் தெருக் கூத்தின் வேரானது ஊடுருவி உள்ளதை அறிய முடிகிறது.
- திருவிழாக்கள், சடங்கு சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இறை வழிபாடுகள் ஆகியவற்றின் போது தெருக்கூத்து என்ற கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- கூத்துக் கலை ஆனது நடிப்புடன் கூடிய வசனம், ஆடல், பாடல் போன்ற அனைத்தையும் உடையதாக உள்ளது.
- இரவு 9 மணிக்கு தொடங்கி, விடியற்காலை வரை தொடர்ந்து நடைபெறுவதாக தெருக்கூத்து உள்ளது.
Similar questions
Social Sciences,
4 months ago
Social Sciences,
4 months ago
English,
4 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago