மேடைப் பேச்சில் குறிப்பிடப்படும் ஐவகை நடைகள் யாவை?
Answers
Answered by
0
மேடைப் பேச்சில் குறிப்பிடப்படும் ஐவகை நடைகள்
பேச்சுக் கலை
- பேச்சு மொழி ஆனது கலை வடிவமாக உருவெடுத்து சமூகத்தின் மிக இன்றியமையாத அடையாளமாக மற்றும் ஆளுமைத் திறனாக வளர்ந்து உள்ளது.
- பேச்சுக் கலை ஆனது மன்னர் ஆட்சி, ஏகாதிபத்திய ஆட்சி, அந்நியர் ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி மற்றும் முடி ஆட்சி ஆகிய ஆட்சிகளை வீழ்த்தி மக்களாட்சியை மலரச் செய்த ஆற்றல் உடைய கலையாக அறியப்படுகிறது.
- மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை பேணிப் பாதுகாப்பதாக பேச்சுக் கலை உள்ளது.
ஐவகை நடைகள்
- பொதுவாக மேடைப் பேச்சில் குறிப்பிடப்படும் ஐவகை நடைகள் கடின நடை, எளிய நடை, இலக்கிய நடை, அடுக்கு மொழி நடை மற்றும் கொச்சை நடை முதலியன ஆகும்.
Answered by
0
விடை
மனிதனை மனிதனாக்கிய அருங்கலைகளில் ஒன்று 'சொல்லாடல்' என்ற பேச்சாற்றல். பேசுபவரை 'சொற்செல்வர்' என்றும், கேட்கின்றவரை 'செவிச்செல்வர்' என்றும் தமிழ் மரபு பேசுகிறது. மனிதர்களின் எல்லா பேச்சும் பேச்சாவதில்லை. மழலை பேச்சும், கிளிப்பேச்சும் போல மகிழ்வு தருவதும் இல்லை.
''ஆர்த்தசபை நுாற்றொருவர்; ஆயிரத்து ஒன்றாம் புலவர்வார்த்தை பதினாயிரத்து ஒருவர்'' - என்பார் அவ்வையார்.உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நுாறு பேரில் ஒருவருக்கு வாய்க்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய் திகழ்வர். ஆனால், பேச்சாளராக இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பது அவ்வையாரின் கருத்து.
Similar questions