பேச்சாளரின் பண்புகளுள் ஏவையேனும் நான்கினைக் கூறுக.
Answers
Answer:
கு. ஞானசம்பந்தன். இவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரை நகரில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார். நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
கு. ஞானசம்பந்தன்
300pxl
பிறப்பு
குருநாதன் ஞானசம்பந்தன்
19 அக்டோபர் 1956 (அகவை 63)
சோழவந்தான்,
மதுரை மாவட்டம்,
தமிழ்நாடு,
இந்தியா.
இருப்பிடம்
மதுரை
தேசியம்
இந்தியர்
கல்வி
தமிழில் முனைவர் பட்டம்
பணி
தமிழ்ப் பேராசிரியர்
அறியப்படுவது
1. பட்டிமன்ற நடுவர்,
2. நகைச்சுவைப் பேச்சாளர்
3. எழுத்தாளர்
சமயம்
இந்து
பிள்ளைகள்
2
பேச்சாளரின் பண்புகள்
- பேச்சாளர் அவர்கள் கருத்துத் தெளிவு, சுருக்கம், தன் கருத்தில் என்றும் உறுதியாக இருத்தல், நூல் வழிக் கற்றது மட்டுமின்றி தன் சுய சிந்தனையால் தோன்றிய கருத்துக்களையும் முன்வைத்தல் வேண்டும்.
- இவர் கேட்பவர்களுக்கு புரியும் விதமாக எளிய மொழி நடை, நகைச்சுவை உணர்வு, அவை அறிந்து பேசுதல், நேரம் அறிந்து பேசுதல், உண்மையினை மட்டும் பேசுதல், சாதி, மத, மொழி, இன தூண்டல்களும் வேறுபாடுகளும் இன்றி பேசுதல் வேண்டும்.
- மேலும் பிறரின் கருத்துக்களை ஏற்கும் மனப்பான்மை, பிறரின் நேரத்தினை எடுத்துக் கொள்ளாமல் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பேசி முடித்தல் முதலியன பேச்சாளரின் தலை சிறந்த பண்புகள் ஆகும்.