மொழியின் இரு வடிவம் யாது?
Answers
Answer:
ஒலி வடிவம் மொழிக்கு அடிப்படையாக ஓலி அமைகிறது.ஒலிகளைக் குறியீடுகளாகக் கொண்டு ஒருவரின் எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த மொழி உதவுகிறது. மொழி ஒலிகளால் ஆனது. ஒலிகளைக்கொண்டே சொற்களும் சொற்களைக் கொண்டே தொடர்களும் அமைக்கப்படுகின்றன.தமிழில் ஒலிபிறப்பதற்கும் எழுத்துக்களுக்கும் மாறுபாடு இல்லை. ஒர் எழுத்துக்குரிய ஒலி, அவ்வெழுத்து இடம்பெறும் சொல்லிலும் மாறுபடாது ஒலிக்கிறது.எடுத்துக்காட்டாக, த, மி, ழ் என்னும் எழுத்துக்களுக்குரிய ஒலி, தமிழ் என்னும் சொல்லை ஒலிக்கும்போதும் ஒரே மாதிரியாக ஒலிப்பதனைக் காணலாம்.
வரி வடிவம்.
மொழியில் ஒலியைக் குறிக்கும் குறியீடு எழுத்து எழுதப்படுவது எழுத்து. மனக்கருத்துக்களைப் பிறர்க்கு வரிவடிவமாக உணத்துவது எழுத்து. ஒரு மொழியின் இலக்கிய இலக்கண வளத்தைப் பாதுகாத்து மொழியை நிலைபெறச் செய்வது வரி வடிவமாகும்.வரிவடிவம் இல்லாத மொழி, காலப்போக்கில் மறைந்துவிடும். பண்பட்டநாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு இட்டுச்செல்ல க்ல்மேல் எழுத்தாகவரிவடிவம் அமைகிறது.
Explanation:
எண்ணூம் எழுத்தும் கண்ணெனத்தகும்,-என்று ஒவையார் மொழியின் சிறப்பினைக் குறிப்பிட்டுள்ளார். மொழி என்பது ஒலி வடிவம், வரி வடிவம் என்ற இரு வடிவங்களைக் கொண்ட பொருள் தரும் தொடரமைப்பு, மொழிப்பாடம் என்பது குழந்தைகளின் மொழித்திறன்களை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டது.
Answer:
பேச்சு மொழி , எழுத்து மொழி