Hindi, asked by sivanesh2008, 7 months ago

பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
அவலிமையற்றவர்
ஆ) கல்லாதவர்
இஒழுக்கமற்றவர்
ஈ) அன்பில்லாதவர்
சிக்க எழுதக்கிடைப்பது
(
-​

Answers

Answered by SwarnaShreeARS2007
16

Answer:

Option

Explanation:

b is right

I am also Tamil so please follow me

Answered by ravilaccs
1

Answer:

பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் கல்லாதவர்

Explanation:

பொழிப்பு (மு வரதராசன்): கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்.

மணக்குடவர் உரை: உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர்.

இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.

பரிமேலழகர் உரை: கல்லாதவர் - கல்லாதவர், உளர் என்னும் மாத்திரையர் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி; பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர்.

(களர் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும் நன்கு மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: கல்லாதவர் உடம்போடு உள்ளார் என்று சொல்லும் அளவினாராதலன்றி பிறர்க்குப் பயன்படாமையால் களர் நிலம் ஒத்தவராவர்.

களர்நிலத்தில் ஒன்றும் விளையாது. அதுபோல், கல்லாதவர் வாழ்க்கையில் ஒரு பயனும் விளையாது. இன்று வேளாண்மை வளர்ச்சியில் களர்நிலத்தை நன்னிலமாக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களர் நிலத்தில் தண்ணீரைக் கட்டி ஜிப்சம் என்ற உப்பைக் களரின் அளவுக்கேற்றவாறு கலக்கி மூன்று நாட்கள் நிறுத்தி வைத்துத் தண்ணீரை வடியவிட்டால் களர் போய்விடும். களர் நிலத்திலேயே விளையக் கூடிய 'ஒட்டுக்கால்' என்ற நெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லாதவரும் கற்றாரோடு உறவு கொண்டு கலந்துரையாடல் மூலம் கல்வியின்மையால் வரும் தீமையை மாற்றிக் கொண்டு பயனுடைய வாழ்க்கை வாழலாம் என்பது கருத்து.

பொருள்கோள் வரிஅமைப்பு:

கல்லாதவர் உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களர்அனையர்.

பதவுரை: உளர்- இருக்கின்றனர்; என்னும்-என்கின்ற; மாத்திரையர்-அளவினர்; அல்லால்-அன்றி; பயவாக் களர்-விளைவுக்குப் பயன்படாத உவர் நிலம்; அனையர்-ஒப்பர்; கல்லாதவர்-கல்லாதவர், கல்வியறிவு இல்லாதவர்.

உளரென்னும் மாத்திரையர் அல்லால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

  • மணக்குடவர்: உளரென்னும் அளவினையுடையாரல்லது;
  • பரிப்பெருமாள்: உளரென்னும் அளவினையுடையாரல்லது;
  • பரிதி: கல்வியில்லாதவர், செல்வம் பெற்றார்களாகில், பெருமை பெறுவார்;
  • காலிங்கர்: கல்லாதார் வெறும் பிணம் ஆதலன்றிச் சிறுது உயிரோடு நடைபெறுதலை உடையரென்று சொல்லிக் கொள்ளும் அளவின்றி;
  • பரிமேலழகர்: காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி;
  • பரிதி தவிர மற்ற பழம் ஆசிரியர்கள் 'உளரென்னும் அளவினையுடையார்' என இப்பகுதிக்கு உரை கண்டனர். பரிதி 'செல்வம் பெற்றார்களாகில், பெருமை பெறுவார்' என்கிறார்.
  • இன்றைய ஆசிரியர்கள் 'உயிரோடு இருக்கிறார் எனலாமே யன்றி', ' பெயரளவுக்குத்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்', 'உலகத்திலே இருக்கின்றார் என்ற அளவே கூறப்படுதற்கு உரியர்', 'மனிதரைப் போல் தோன்றுகின்ற அளவே அல்லாது' என்றபடி உரை தருவர்.
  • 'இருக்கின்றார் என்ற அளவே கூறப்படுதற்கு உரியரன்றி' என்பது இப்பகுதியின் பொருள்
  • பயவாக் களர்அனையர் கல்லா தவர்:
Similar questions
Math, 3 months ago