ஒரு மொழிக்கு இலக்கணம் ஏன் தேவை?
Answers
Answered by
1
ஒரு மொழிக்கு இலக்கணம் தேவைப்படக் காரணம்
- இலக்கணம் ஆனது ஒரு மொழிக்கு ஒழுங்கு அமைப்பினையும், சீர்மையயும் தருகின்றது.
- ஒரு மொழியின் பல்வேறு கூறுகளை எடுத்துரைப்பதாக உள்ள இலக்கணம் ஆனது மொழியின் இயக்கத்தினை பல விதிகளாக பாகுபடுத்தி காட்டுகிறது.
- நாம் ஒரு மொழியினை திருத்தமாகப் பேசவும், படிக்கவும், பிழையின்றி அந்த மொழியின் சொற்களை எழுதவும் அந்த மொழியின் இலக்கணம் மிகவும் இன்றியமையாமையாக உள்ளது.
- நாம் ஆழ்ந்த இலக்கண அறிவினை பெற்று இருந்தால் தான் இலக்கியத்தின் பல நுட்பமான கருத்துக்களை கூர்ந்து உணர்ந்து சுவைக்க இயலும்.
- ஒரு மொழிக்கு கண் போன்றதாக இலக்கணம் விளங்குகிறது.
- எனவே ஒரு மொழிக்கு இலக்கணம் தேவையான ஒன்று ஆகும்.
Similar questions