ஒரு மொழியின் சொல்வளம் காட்டும் கண்ணாடியே அகராதி - இக்கூற்றை மெய்ப்பிக்க
Answers
வினா
ஒரு மொழியின் சொல்வளம் காட்டும் கண்ணாடியே அகராதி - இக்கூற்றை மெய்ப்பிக்க
விடை
.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - ஒரு கலாச்சார நிகழ்வு - வெங்கட் சாமிநாதன்
50 views
Subscribe
நா.கண்ணன்'s profile photo
நா.கண்ணன்
unread,
Jul 16, 2008, 3:16:49 AM
to மின்தமிழ்
தமிழில் முதன் முறையாக, தற்காலத் தமிழ் அகராதி ஒன்றை க்ரியா நிறுவனம்
1992-ன் ஆரம்பத்தில் வெளியிட்டது. தற்காலத் தமிழ் என்றால் தமிழ் மொழியின்
பேச்சிலும் பொது மொழியிலும் வந்து சேர்ந்துள்ள சொல் வளத்தை அங்
கீகரிப்பதும், கணக்கில் எடுத்துக் கொள்வதும் அதோடு அவற்றின் பொருளை
முடிந்த அளவு துல்லியமாக பதிவு செய்வதுமாகும். தமிழ் பேசுவோருக்கு
கிராக்கி, கிராக்கிப்படி, கிராப்பு போன்ற சொற்கள் எதைக் குறிக்கின்றன
என்று தெரியும். இவை பேச்சுத் தமிழில் வழங்குகின்றன. இவை செய்தித்
தாட்களிலும், அரசு அலுவலங்களிலும், தெருக்களிலும் கூட வழங்கும் தமிழ்
தான். ஆனால், இம்மாதிரி தமிழுக்கு வந்து சேரும், பயன் படும் சொற்களுக்கான
அகராதி ஒன்று வேண்டும் என்ற எண்ணம் நமக்கு எழுந்ததில்லை. இவை தமிழ்
அறிஞர்களால், தமிழ் கல்வி நிறுவனங்களால், அரசால் தமிழ் என
ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏற்றுக்கொள்ளாத இவர்கள் பேச்சிலும்
வாழ்க்கையிலும் இச்சொற்கள் புழங்குகின்றன தான். இவை போன்ற சொற்களைத்
தவிர்த்து வாழ்க்கை நடத்துவது சிரமமான காரியமாகிவிடும்.
இது போகட்டும். முதலில் அகராதி பற்றிய சிந்தனையே நமக்கு வெகு சிரமத்துடன்
தான் எழுகிறது. தமிழ் பற்றி நம் தமிழ்ப் பற்று பற்றி என்னென்னவோ
முழக்கங்கள் இடுகிறோம். ஆனால் மொழி வளம் பற்றிய அடிப்படியான சிந்தனைகள்,
அதைத் தொடர்ந்த செயல்கள் இருப்பதில்லை நம்மிடம். மேடை முழக்கங்களே
போதும், முரசைறைவிப்பே போதும். இவையே நமக்குப் புகழ் தந்துவிடுவதால்
அத்தோடு நம் சிந்தனையும் செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன. 1910-ல்
சிங்கார வேலு முதலியார் என்ற தனி நபரின் முயற்சியில் தான் அபிதான
சிந்தாமணி என ஒரு அகராதி வெளி வருகிறது. அது தந்த உத்வேகத்தினாலோ என்னவோ
அந்த நூற்றாண்டுப் பத்துக்களில் தமிழ் அகராதி தொகுப்பிற்கான ஆரம்ப
ஆலோசனைகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கின. பெரிய காரியம் தான்.
அரசும் பல்கலைக் கழகமும் இரண்டினாலும் சாத்தியப்படும் அறிஞர் கூட்டமும்,
பணமும் எதற்கும் குறைவில்லை. 1913 லிருந்து வெகு தீவிரமாகத் தொடங்கிய
அந்தப் பணி 1924 லிருந்து பாகம் பாகமாக வெளிவரத் தொடங்கியது 1936-ல்
மொத்தம் 4000 பக்கங்களும் ஒரு லக்ஷத்திற்கு மேற்பட்ட சொற்களும் கொண்ட
Tamil Lexicon பிரசுரம் பெற்றது. அவ்வளவே. அது அன்றைய பொதுத் தமிழை,
பேச்சுத்தமிழை கணக்கில் எடுத்துக் கொள்ளாதது. அச்சேர்க்கைகள் தமிழாகக்
கருதப்படவில்லை அவ்வகராதியைத் தொகுத்த அறிஞர் குழாத்தினால். அந்த அகராதி,
தமிழ்ச் சொற்களுக்கு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அதிகம் பொருள் கூறும்
பாங்கில் உருவானது. எதாக இருந்தாலும், 1936=ல் முடிவடைந்த அது 1982-ல்
திரும்ப அப்படியே அச்சாகி வெளிவந்ததே அல்லாது, திருத்தப்பட்டதோ
விரிவாக்கப்பட்டதோ அல்ல. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுத் தமிழ் வளர்ச்சி,
மொழி பெற்ற மாற்றங்கள் இது வரை பதிவு பெறவோ, கணக்கில் கொள்ளப்படவோ இல்லை.
எனக்குத் தெரிந்து நாடு சுதந்திரம் பெற்ற உணர்ச்சிப் பிரவாகத்தில் கலைக்
களஞ்சியம் ஒன்று, பெரிய சாமித் தூரனின் தலைமைப் பொறுப்பில் என
நினைக்கிறேன், நாற்பதுகளின் கடைசியிலும் ஐம்பதுகளின் ஆரம்ப வருடங்களிலும்
பல தொகுப்புகளாக வெளிவந்தது. அதுவும் இன்றைய தலைமுறையினருக்கு நினைவு
படுத்தப்பட வேண்டிய ஒரு அரும்பொருட்காசிப் பொருளாகிவிட்டது. தமிழ் மொழி
பற்றிய இவ்வளவு மெத்தனமும் காணக்கிடைப்பது, தமிழ் இனத்தின், தமிழ்
மொழியின் மீட்டுயிர்ப்பும், மறுமலர்ச்சியும் எங்களாலே தான்
நிகழ்ந்துள்ளது என்று உரிமை கொண்டாடுவோர் அரசோச்சும் நீண்ட காலகட்டத்தில்
தான்.
ஒரு மொழியின் சொல்வளம் காட்டும் கண்ணாடியே அகராதி
அகராதி
- ஒரு மொழியில் உள்ள அனைத்து சொற்களையும் அகர வரிசையில் அமையும் படி தொகுத்து விளக்கும் நூல் தான் அகராதி ஆகும்.
- அகராதியின் மூலமாக ஒரு சொல் குறிக்கும் பல பொருளையும், பல சொற்கள் குறிக்கும் ஒரு பொருளையும் அறிய இயலும்.
- பண்டைய இலக்கிய இலக்கணங்களின் சொல் வளம், பொருள் ஆழம் ஆகியவற்றினை இந்த கால மக்களும் தெளிவாக அறிந்து சுவைத்து மகிழ உதவியாக விளங்குவது அகராதி என்ற அகரமுதலிகள் ஆகும்.
- அறிவியல் வளர்ச்சி ஆனது எத்துணை விரைவாக விளங்கினாலும் ஒரு மொழியின் உயிர் அந்த மொழியினை பேசும் மக்களிடத்தில் தான் உள்ளது.
- அகராதி ஆனது பல தகவல்களை அளித்து ஒரு மொழியின் சொல்வளம் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது.