கீழ்க்காணும் இதழ்களுள் விடுதலைப் போராட்ட காலத்தில் வெளிவராதது எது? அ) சுதேசமித்ரன் ஆ) தேசபக்தன் இ) இந்தியா ஈ) அரும்பு
Answers
Answer:
இந்தியாவில் நிலவிய காலனியாதிக்கச் சூழலில், பொதுமக்களின் கருத்தை உருவாக்கவும், எழுத்துரிமை, பேச்சுரிமை மூலம் அரசியல் விழிப்புணர்வு மெல்ல விரிந்து பரவவும் இதழியல் துறை பெரும்பங்கு ஆற்றியது. பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட ஆங்கிலக் கல்வியால் பெற்ற இதழியல் அறிவு[1] பிரித்தானியருக்கு எதிரான போரில் வலிமை வாய்ந்த கருவியாகப் பயன்பட்டது. தாய்மொழியில் தோன்றிய சுதேசமொழி இதழ்கள் மக்களுக்கு எழுச்சியூட்டின. தாய்மொழி வழியே மக்கள் அரசியல் தொடர்பு கொள்ள இதழ்கள் வழிவகுத்தன. இதன் ஆபத்தை உணர்ந்த பிரித்தானிய அரசு இதனைத் தடுக்க நினைத்தது. 1878-ல் அன்றைய கவர்னர் ஜெனரல் லிட்டன் பிரபு சுதேசப் பத்திரிகைகள் சட்டம் கொண்டு வந்தார். இச்சட்டத்தின் படி சுதேசமொழிகளில் குற்றம் என்று காணப்படும் செய்திகள் ஆங்கில மொழி இதழ்களில் வெளியிடப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகாது என்று கருதப்பட்டது. இதன் மூலம் சுதேச மொழிகளின் மூலம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படும் என்ற பிரித்தானியரின் அச்சம் நன்கு விளங்கும். இதற்கு சென்னை மாகாணத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஏனெனில் அப்போது சென்னை மாகாணத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவுக்கு எந்த இதழும் இல்லை எனக் கருதியதுதான்.[2] ஆனால் அதன் பின்னர் பல புரட்சிக் கருத்துகள் நிறைந்த பல தமிழ் இதழ்கள் தோன்றி விடுதலை உணர்வை வீறுகொண்டு எழச்செய்தன.
அரும்பு
விடுதலைப் போராட்ட காலத்தில் வெளிவந்த தமிழ் இதழ்கள்
- 1882 ஆம் ஆண்டு ஜி.சுப்பிரமணியம் என்பவர் சுதேசமித்திரன் என்ற வார இதழினை தொடங்கினார்.
- இது 1889 ஆம் ஆண்டில் நாளிதழாக வெளிவரத் தொடங்கியது.
- சுதேசமித்திரன் இதழ் ஆனது தமிழக மக்களின் துயில் நீக்க, புரட்சிகரமான கருத்துகள் மற்றும் சுவைமிகு உரையாடலுடன் வலுவோடும், புதுப்பொலிவோடும் வெளிவந்தது.
- 1904 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் அவர்கள் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராக பணிபுரிந்தார்.
- 1907 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் இந்தியா என்ற தமிழ் மாத இதழையும், பால பாரதம் என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்.
- இவ்விரு இதழ்களையும் வாயிலாக மக்களிடையே விடுதலை உணர்வினை வளர்த்தார்.
- 1917 ஆம் திரு.வி.க அவர்களால் தொடங்கப்பட்ட தேசபக்தன் என்ற நாளிதழ் ஆனது சுதேசமித்திரன் இதழிற்கு பிறகு தமிழக மக்களிடையே விடுதலை உணர்வினை ஊட்டியது.