தமிழ் சிற்றிதழ்கள் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
0
தமிழ் சிற்றிதழ்கள்
- சிற்றிதழ்கள் என்பது ஒரு குறிப்பிட்ட குழுவிலிருந்து குறிப்பிட்ட வாசகர்களை நோக்கி வலிமையான சமூக நோக்கத்தோடு வெளியிடும் இதழ்கள் என அழைக்கப்படுகின்றன.
- சிற்றிதழ்கள் மாத, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இதழ்களாக வெளிவருகின்றன.
- சிற்றிதழ்களே தமிழ் இலக்கியப் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.
- தனக்கு சார்பான நிலையில் அமைந்த பொழுதுபோக்கு எழுத்துகளை மட்டுமே வணிக இதழ்கள் வெளியிடுகின்றன.
- ஆனால் சிற்றிதழ்கள் மக்களின் வாழ்வியல் பதிவுகளைத் தாங்கி வரும் சமூக மாற்றத்திற்கான கருத்து ஆயுதங்களாக விளங்குகின்றன.
- மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி, எழுத்து, கசடதபற, ழ, வானம்பாடி, இலக்கிய வட்டம், சூறாவளி, சலங்கை, கலைமகள், சுபமங்களா, கணையாழி, நிகழ் முதலியன புகழ்பெற்ற சிற்றிதழ்கள் ஆகும்.
Similar questions