இணைய இதழ்கள் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
1
இணைய இதழ்கள்
- இதழ்கள் நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- இன்றைய நவீன கால கட்டத்தில் இணையத்தளம் மக்களிடையே செய்திகளை மிக விரைவாக கொண்டு சேர்க்கும் ஊடகமாக செயல்பட்டு வருகின்றன.
- இன்றைய நவீன உலகில் இணையம் நம் அன்றாடச் செயல்பாடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
- இணையத்தில் வெளியிடப்படும் இதழ்கள், கணினி வழியாகவோ அல்லது திறன்பேசி வழியாகவோ மிக எளிதாக, மிக விரைவாக மக்களை சென்றடையும் திறனை கொண்டு உள்ளன.
- இதழ்களில் பரவலில் அச்சு இதழ்களை விட இணைய இதழ்களின் பரவல் உலக அளவிலானது ஆகும்.
- முழுவதும் மின்பக்கங்களை உடைய மின்னிதழ்கள் இணையத்தில் வெளியிடப்படுகின்றன.
Similar questions