India Languages, asked by prabasilpha, 7 months ago


தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்
மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.​

Answers

Answered by hameedhabanu24
107

*முன்னுரை

*பயிர் வகைச் சொற்கள்

*கிளைப் பிரிவுகள்

*காய்ந்த அடியும் கிளையும்

*பூவின் நிலைகள்

*கெட்டுப்போன காய்கனி வகை

*இளம் பயிர் வகைக்கு வழங்கும் சொற்கள்

முன்னுரை

தமிழ் மொழி வேறு மொழிகளுக்கு இடையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது . சொல்வளம் , இலக்கிய செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேணும் , தமிழ் மட்டும் அதில் தலை சிறந்ததாகும் .

பயிர் வகைச் சொற்கள் :

தமிழ்ச்சொல் வளத்தைப் பல வழிகளில் காணலாம் . பயிர் வகை சொற்கள் மட்டுமே சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது .

அடிவகை :

தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொற்கள் - தாள் , தண்டு , கோல் , தூறு, தட்டு ,கழி , கழை, அடி என பல சொற்களில் தமிழர்கள் வழங்குகின்றார்கள் .

கிளைப் பிரிவுகள் :

கவை , கொம்பு , கிளை , சினை, போத்து , குச்சு , இணுக்கு எனப் பல சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காய்ந்த அடியும் கிளையும் :

சுள்ளி, விறகு ,வெங்கழி , கட்டை

இலை வகை :

இலை , தாள் , தோகை , ஓலை , சண்டு , சருகு

கொழுந்து வகை :

தாவரத்தின் நுனிப்பகுதியை குறிக்கும் சொற்கள்:

துளிர் அல்லது தளிர், முறி அல்லது கொழுந்து ,குருத்து , கொழுந்தாடை. என பல சொற்களை தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் .

பூவின் நிலைகள் :

அரும்பு , போது , மலர் , வீ , செம்மல்

பிஞ்சு வகை குறிக்கும் சொற்கள் :

பூம்பிஞ்சு , பிஞ்சு , வடு , மாசு, இவ்வகை, கரும்பு , முட்டுக் குரும்பை , இளநீர் , குழாய், கருக்கல், கச்சல் .

குலை வகை குறிக்கும் சொற்கள் :

கொத்து , குலை , தாறு , கதிர் , அலகு அல்லது குரல் , சீப்பு

கெட்டுப்போன காய்கனி வகை :

சூம்பல் ,சிவியல் , சொத்தை , வெம்பல் , அளியல் ,அழுகல் ,ச சொண்டு என சொற்கள் உள்ளன .கோட்டான் காய் , கூகைக்காய் , தேரைக்காய் , அல்லிக்காய் , ஒல்லிக்காய் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர் .

பழத்தோல் வகை குறிக்கும் சொற்கள் :

தொலி , தோல் , தோடு , ஓடு , குடுக்கை , மட்டை , உமி , கொம்மை என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர் .

மணி வகை குறிக்கும் சொற்கள் :

கூலம் , பயிறு , கடலை , விதை , காழ் , முத்து , கொட்டை , தேங்காய் , முதிரை முதலியவை வழங்கும் சொற்களாகும் .

இளம் பயிர் வகைக்கு வழங்கும் சொற்கள் :

நாற்று , கன்று , குருத்து , பிள்ளை, குட்டி , மடலி , வடலி , பைங்கூழ் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

இதன் மூலம் தமிழ் சொல் வளமுடையது என்றும் தமிழ்நாடு பொருள் வளம் உடையது என்றும் தெளிவாக விளங்கும் . ஒரு நாட்டின் சொல் வளத்திற்கு தக்கபடியே அந்நாட்டு மக்களின் அறவொழுக்கங்களும் அமைந்திருக்கும் . பொருளைக் கூர்ந்து நோக்கி முன் பாகுபாடு செய்து அவற்றிற்கேற்பப் பருப்பொருட் சொற்களும் நுண்பொருட் சொற்களும் அமைத்துக்கொள்வது சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்கட்கே இயலும் .

Answered by sakthiajith860
11

Answer:

புளயங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது

Similar questions