இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இணைய இதழ் அ) திண்ணை ஆ) பதிவுகள் இ) வார்ப்பு ஈ) கீற்று
Answers
Answer:
அச்சு இதழ்களின் வடிவமைப்பில் இருந்து மாறுபட்டு பல்லூடகத் தன்மையுடன் இணையத்தில் வருகிற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படுகின்றன. இன்றைய அச்சு இதழ்களில் செய்திகளைக் கணிப்பொறியில் தட்டச்சு செய்வர்; பக்கமாக்குர்; ஒளிப்படம் ஆக்குர்; அதை அச்சு எந்திரத்தில் பொருத்தித் தாளில் அச்சிடுவர். பின்னர் பல்வேறு ஊர்களுக்கு விநியோகிப்பாளர் மூலமாக அனுப்புவர். அவ்வூர் முகவர் வழியாக வாசகரை இதழ்கள் சென்றடையும்.
ஆனால், இணைய இதழானது கணினியில் தட்டச்சு செய்து, அச்செய்திகளுக்குத் தேவையான புகைப்படங்கள், வீடியோ அல்லது அசைவூட்டுப்படங்களை இணைத்து பதிவேற்றுவர். உடனே இது எந்த விநியோகிப்பாளரும் இன்றி நேரிடையாக நம் கணினி, அல்லது செல்பேசி வழியாக வாசகர்களைச் சென்றடைகிறது. சில இணைய இதழ்கள் வானொலியைப் போன்று ஒலிவடிவிலும் செய்திச் சேவையை வழங்குகிறது. இத்தகைய இதழ்களே இணைய இதழ்கள் எனப்படுகிறன.
பதிவுகள்
இணைய இதழ்
- இணையத்தில் மட்டும் வெளி வருகின்ற இதழ்களே இணைய இதழ் ஆகும்.
- இணைய இதழ் ஆனது முழுக்க முழுக்க இணைய வாசகர்களை மட்டுமே சென்றடைகின்றன.
- எனினும் தற்போது வலைப்பூவில் அச்சிதழ்களும், இணைய இதழ்களில் வெளியானவற்றை மீள் பதிவு செய்கின்றன.
- அந்த வகையில் தற்போது இணைய இதழ்கள் சிறந்த ஊடகமாக வளர்ந்து வருகின்றன.
- இணைய இதழ்கள் நல்ல படைப்பாளிக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தினை வழங்குகிறது.
பதிவுகள்
- இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு இதழ்களின் பட்டியலில் இடம்பெற்று உள்ள தமிழ் இணைய இதழ் பதிவுகள் ஆகும்.
- பதிவுகள் என்ற இணைய இதழில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன.