இணையத்தில் தமிழ் இடம்பெற்ற விதத்தினை விவரி.
Answers
இணையத்தில் தமிழின் தோற்றம்
சமுதாய வாழ்வில் எந்தவொரு செயலும் நன்முறையில் தொடங்கி சீரிய முறையில் நடைபெற ஒருங்கினைந்த அமைப்பு முறையே பயன்தரும். பண்டைய தமிழ் நாகரிகத்தின் பன்னாட்டுச் செய்திகளாகத் தமிழர்கள் தென்மேற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரசாங்கத் தூதுவர்களாகவும், வணிகர்களாகவும், அந்தந்த நாடுகளில் சில காலம் குடியேறினர். இவ்வாறு குடியேறிய மக்கள் நல்ல நிலையில் வாழ்கின்றனர். ஆயினும் தமிழ் நாட்டிலிருந்து பல்லாண்டுகளுக்கு முன்பு சென்ற தமிழர்களின் வழித்தோன்றல்கள் தன் தாய் நாட்டுடன் நேரடித் தொடர்பு குறைந்ததால் தமது தாய்மொழியான தமிழை மறந்தும், தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பினை உணராமலும் போய்விட்டனர்.
இந்நிலையில் இணையத்தின் வளர்ச்சியால் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ள தமிழை இணையத்தில் தோற்றம் பெறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். “உலகெங்கும் பரவிவரும் தமிழர்கள் இணையத்தின் வழியாகத் தமிழில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினர். அவர்கள் தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கலை ஆகியவற்றைத் தொடர்ந்து கற்றுத் தெளியவும் தமிழ் இணையதளங்களை உருவாக்க விரும்பினர். உலகின் பல பகுதிகளில் வாழ்ந்துவரும் கணிப்பொறியில் வல்லமைபெற்ற தமிழர்கள், தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர்.”
அம்முயற்சியின் விளைவே இன்று இணையப் பயன்பாட்டில் தமிழ் தலைசிறந்து வளர்கிறது. தமிழில் இணைய தளங்கள் உருவாக பிறிதொரு காரணமும் முக்கியமாகும். 1983-க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் கலவரத்தால் தமிழர்கள் உலகம் முழுக்க புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுபோன்று தமிழகத் தமிழர்கள் பணியின் பொருட்டு அயல் நாடுகளுக்கு சென்றனர். இவ்வாறு சென்ற தமிழர்கள் தாய்நாட்டுடன் தொடர்பு கொள்ளவும், பிற நாடுகளில் வாழும் தமிழர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இணையத்தைப் பயன்படுத்தினர். இதில் தங்களை ஒன்றிணைக்க தமிழ் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர். இதன் விளைவாய் பல்வேறு சங்கங்கள், அமைப்புகளை இணையத்தில் உருவாக்கினர். உலகம் முழுக்க இத்தகைய பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாய் இணையத்தில் தமிழ் எளிதில் வளர்ந்தது.
“தமிழ் இணையத்தளங்களின் தோற்றம் பற்றித் துல்லியமாகக் குறிப்பிட முடியாதபடி உள்ளது. இதற்கு காரணம் இத்தகைய முயற்சி உலகம் முழுக்க பரவலாக நடந்தமையாகும். ஒவ்வொரு தளத்தினரும் தங்களின் முயற்சியே முதன்மை என்கின்றனர்.
இவ்வாறு குறிப்பிட்டுச்சொல்ல முடியாத அளவிற்கு இணையத்தில் தமிழின் தோற்றம் பரவலாகவும், விரைவாகவும் உருவானது. இத்தகைய முயற்சியும் ஒரு வகையில் இணையத்தில் தமிழின் வளர்ச்சிக்கு பெரும் பங்காய் அமைந்தன.
இணையத்தில் தமிழின் வளர்ச்சி நிலை
உலகின் பழமை வாய்ந்த உயர்தனிச் செம்மொழிகள் எட்டில் (கிரேக்கம், இலத்தீன், அரபி, சீனம், ஹீப்ரு, பாரசீகம், தமிழ், சமஸ்கிருதம்) இன்றளவும் மக்களின் பயன்பாட்டில் உள்ள மொழியாக தமிழும் சீனமும் விளங்குகிறது. இன்றைய உலகமயமாக்கலான காலகட்டத்திலும் வழக்காற்றில் நவீன மொழியாகவும், வரலாற்றில் வளமான மொழியாகவும் வளர்ந்து நிற்கிறது. இன்றைய காலகட்டத்தில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு கணினித்தமிழ் நான்காம் தமிழாய் வளர்ந்து வருகிறது.
“ஒரு நாட்டின் மொழியை ஏற்றுக்கொள்ளாத கணிப்பொறி அந்நாட்டில் இயங்க முடியாது. கணிப்பொறியை ஏற்றுக்கொள்ளாத ஒரு மொழி வாழ முடியாது என்பது வரலாற்று உண்மையாகிவிட்டது. மேற்கண்ட கூற்று உணமையே. ஏனெனில் இன்றைக்கு கணிப்பொறியை பயன்படுத்தாத துறைகளே இல்லையெனும் அளவிற்கு கணினி வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கணினியில் தமிழ்மொழியின் பயன்பாட்டிற்கு காரணம் நம் மொழியின் சிறப்பே ஆகும். ஏனெனில் தமிழ்மொழியில் எழுத்தமைப்பு, ஒலியமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு ஆகிய எல்லாவற்றிலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கிறது. இத்தனை சிறப்பினை பெற்றிருப்பதால் கணினியில் தமிழ் மிகக் குறுகிய காலத்தில் நுழைந்தது.
இதற்குப் பெருமளவில் துணை நிற்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களேயாவர். நாடு, இனம், மொழி எனக் கடல் கடந்து சென்றாலும் நம் தமிழர்கள் பண்பாடு, மொழி, கலை போன்றவற்றால் தமக்கான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தை விட்டுத் தொழில் காரணமாக அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், தமிழைப் பேசவும், கேட்கவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணையம் மூலம் சந்தித்துக்கொள்ள தமிழில் மின்னஞ்சல்களையும், இணைய இதழ்களையும், இணையத் தளங்களையும் பயன்படுத்தினர்.
இதுபோன்ற ஆரம்பகட்ட முயற்சிகளே இன்று இணையத்தமிழ் என்ற துறையை வளர்த்தெடுத்தன. கணிப்பொறி வரலாற்றில் 1975-இல் தனிமனிதக் கணிப்பொறி (Personal Computer) கண்டுபிடிக்கப்பட்டதும், உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் தத்தமது மொழியைக் கணினியில் காண ஆர்வம் காட்டினர். இது போன்றே கணிப்பொறியில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியினை புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்டனர். “தமிழ் எழுத்துருக் குறியாக்க முயற்சிகள் 1980-இன் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன.”
உலகம் முழுவதிலும் பல்வேறு தமிழறிஞர்கள்
இணையத்தில் தமிழ் இடம்பெற்ற விதம்
- உலக அளவில் பல கணினி வலை அமைப்புகளின் கூட்டு இணைப்பான பெரும் வலை அமைப்பு இணையம் என அழைக்கப்படுகிறது.
- 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட மலாய், ஆங்கிலம், மாண்டரின், தமிழ் முதலிய நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலைத் தளத்தில் முதலில் அரங்கேறிய மொழி தமிழ் மொழி ஆகும்.
- நா. கோவிந்தசாமி என்ற சிங்கப்பூர் நாவ்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் சீனக் கணினி வல்லுநர்களுடன் சேர்ந்து தமிழ் நெட் என்ற எழுத்துருவினை உருவாக்கினார்.
- இதன் மூலம் இணையத்தில் தமிழ் மொழி இடம்பெற்றது.
- இணையத்தில் ஏறிய முதல் இந்திய மொழி என்ற பெருமையினை தமிழ் மொழிக்கு கிடைக்க காரணம் நா. கோவிந்தசாமி ஆவார்.