India Languages, asked by anjalin, 9 months ago

முகநூ‌ல், புலன‌ம், ‌கீ‌ச்சக‌ம் கு‌றி‌த்து எழுதுக.

Answers

Answered by steffiaspinno
5

முகநூ‌ல், புலன‌ம், ‌கீ‌ச்சக‌ம்  

முகநூ‌ல் (Facebook)

  • முகநூ‌ல் எ‌ன்பது இணைய‌த்‌தி‌ல் உலக அள‌விலான ந‌ண்ப‌ர்க‌ள் குழுவை உருவா‌க்‌கி‌த் த‌ம்முடைய தகவ‌ல்க‌ள், காணொ‌லிக‌ள், புகை‌ப் பட‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் சமூக ஊடக‌ம் என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • முகநூ‌லி‌ல் ‌விரு‌ப்ப‌ங்களையு‌ம், ‌பி‌ன்னூ‌ட்ட‌ங்களையு‌ம் உடனு‌க்குட‌ன் பெற முடியு‌ம்.

புலன‌ம் அ‌ல்லது க‌ட்செ‌வி (Whatapp)  

  • புல‌ன‌ம் எ‌ன்பது ‌திற‌ன்பே‌சி‌யி‌ல் த‌னி‌ப்ப‌ட்ட முறை‌யிலு‌ம், ந‌ண்ப‌ர்க‌ள் குழு‌க்களை உருவா‌க்‌கியு‌ம் த‌ங்களு‌க்கு‌ள் த‌கவ‌ல்க‌ள், காணொ‌லிக‌ள், புகை‌ப்ப‌ட‌ங்க‌ள் போ‌ன்றவைகளை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் சமூக ஊடக‌ச் செய‌லி ஆகு‌ம்.  

‌‌கீ‌ச்சக‌ம் (Twitter)  

  • ‌‌கீ‌ச்சக‌ம் எ‌ன்பது செ‌ல்பே‌சி‌யி‌ல் குறு‌ந்தகவ‌ல் அனு‌ப்புவது போல இணைய‌த்‌தி‌ன் வ‌ழி குறு‌ந்தகவ‌ல் அனு‌ப்ப‌ப் ப‌ய‌ன்படு‌ம் சமூக ஊடக‌ம் ஆகு‌ம்.
  • ‌கீ‌ச்சக‌த்‌தி‌ல் சொ‌ற்க‌ள், பட‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌சிறு காணொ‌லிகளை ப‌தி‌விடலா‌ம்.
Attachments:
Similar questions