World Languages, asked by dilshathbegumk1972, 10 months ago

முன்னுரை-உயிர்மொழி-தொன்மை மொழி-தனி மொழி-செம்மொழி-பொதுமைப்பண்பு-எங்கள் தமிழ்-அரசின் கடமை-முடிவுரை.​

Answers

Answered by rabi45
20

Answer:

தமிழின் தொன்மைக்கு உலகியல் ஆதாரங்கள்

உலகில் பழமை வாய்ந்த மொழிகள் எனக் கருதப்படும் வடமொழி, சீனம், ஹீப்ரு, இலத்தீன், கிரேக்கம் ஆகியவற்றோடு வைத்து எண்ணப்படும் பெருமையுடையது

வாணிபத் தொன்மை

பழந்தமிழ் நாட்டில் வாணிபம் வளர்ந்திருந்தது. கொடுப்பது குறைவுபடாது வாணிபம் செய்தனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பொருளீட்டினார்கள். நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, வரகு, முதலிய தானிய வகைகளையும், உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை பயறு, கொள்ளு, எள்ளு, முதலிய பயறு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.

பண்டைத் தமிழரின் கடல் வாணிகமும் தொன்மை வாய்ந்தது. தமிழகத்தில் துறைமுகப் பட்டினங்கள் பல இருந்தன. பொன், மணி, முத்து, துகில் கொண்டு கடல் கடந்து வாணிபம் செய்தனர். பூம்புகார் வணிகர்கள் வாழும் இடமாகத் திகழ்ந்தது. தமிழர்களுக்காக சாவக நாட்டுடனும் கடல் வாணிபத் தொடர்பு இருந்தது.

பண்டைய காலத்து வாணிபப் பொருட்கள் துறைமுக நகரங்களிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். பட்டினப் பாலையும், மதுரைக் காஞ்சியும் அவற்றை அழகுறக் கூறுகின்றன.

தொன்மைக்கான இலக்கியச் சான்றுகள்

‘தமிழ்கெழுகூடல்’ என்ற புறநானூறும் ‘தமிழ்வேலி’ என்ற பரிபாடலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்றன. உழவுக்குச் சிறப்பு பெற்ற நிலம் மருத நிலம் வயலும் வயல் சார்ந்த இடமாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது. மருத நிலத்துப் பெருமை கருதியே வேந்தனை முதன்மைப்படுத்தினர் தமிழர்.

இசைக் கலைச் சான்றுகள்

உலக மொழி உருவம் பெறுவதற்கு முன்பே இசை பிறந்து விட்டது. பண்டைய காலத் தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. பண்கள், இசைக் கருவிகள், இசைக் கலைஞர்கள், இசைப்பாடல்கள் என இசை பற்றிய ஏராளமான குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன.

‘நரம்பின் மறைய’ என்று தொல்காப்பியம் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணர முடிகிறது. பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை, நாடகக் கலைஞர்கள் இருந்தமையும் அறிய முடிகிறது. ‘தாலாட்டு’ என்பது குழந்தையைத் தொட்டிலிட்டு பாடுவது ஆகும். ஒப்பாரி என்பது இவருக்கு ஒப்பார் எவருமிலர் என்று இறந்தவரைப் பற்றி பாடுவது.

இன்றைய கர்நாடக இசைக்குத் தாய் தமிழே பண்ணொடு தமிழொப்பாய் என்னும் தேவாரப் பண்ணும், தமிழும் பிரிக்க முடியாதென்று நவிலும், தமிழர் ஐவகை நிலத்திற்கும், ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தனர்.

நிலைத்த மொழி

இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் பலவாகும். இவற்றுள் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள் சிலவே.

அவை தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஈப்ரூ, கிரேக்கம் ஆகியவை.

இவற்றுள் ஈப்ரூவும், இலத்தீனும் வழக்கிலிருந்து போய்விட்டது. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளுள் நம் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஒரு மொழி நிலைத்து நிற்க பழமையும் வளமையும் மட்டும் போதாது. அம்மொழி பேச்சு மொழியாக எழுத்து மொழியாக, ஆட்சி மொழியாக நீதிமன்ற மொழியாக நிலைபெற வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகுதியாக உள்ளது. செந்தமிழ் இலக்கியங்களும், இலக்கணங்களும் காட்டும் அத்துணை உயர்ந்த மொழி பேச்சு மொழியாக இருந்திருக்காது என்கிறார் கால்டுவெல். ஏனெனில் பேச்சு மொழியிலிருந்துதான் இலக்கிய மொழியைப் புலவர்கள் உருவாக்கி இருக்க முடியும். சங்க இலக்கியம் செவ்வியல் இலக்கியமாக இருப்பதால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பேச்சு வடிவம் இருந்திருக்க வேண்டும்.

அதாவது பேச்சுமொழி இலக்கியம் , இலக்கணம் என்ற வரிசையில் தோன்றும்.

தொல்காப்பியம்

சங்க இலக்கியம்

சங்க இலக்கியங்கள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை. மற்ற மொழிகளில் பயன்படுத்தப்படும் பல சொற்கள் தமிழ் மொழி உச்சரிப்புகளாகவே இருப்பது தமிழின் தொன்மைக்கு மற்றொரு சான்றாகும்.

தமிழ் மொழியின் சிறப்பு

தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை நீக்கி விட்டாலும் இயங்கும் அளவிற்கு மிகுதியான வேர்ச்சொற்களைக் கொண்டது தமிழ்மொழி ஆகும். கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகளுக்குத் தாயாக விளங்குவது தமிழ்மொழியாகும். 1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும் 180 மொழிகளுக்கு உறவுப் பெயர்களையும் தந்து உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது.

தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அகம், புறம் என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளது. திருக்குறள் மூலமாக வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்துள்ளது. சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் 26, 350 ஆகும். இந்த அளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை என்று மொழியியல் அறிஞர் கபில்சுவலபில் கூறுகின்றார்.

செம்மொழித் தமிழ்

செந்தமிழ் என்ற சொல் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. (எச்ச நூ – 1) இலக்கண நெறிப்படி அமைந்த சொல், தொடர், செந்தமிழ் ஆகும். செந்தமிழுக்கு எதிர்மறை கொடுந்தமிழ். அதாவது இலக்கண நெறியிலிருந்து சிதைந்த சொல், தொடர் கொடுந்தமிழ் ஆகும். கொடுந்தமிழ் என்ற சொல்லை முதன் முதலாக இலக்கண உரையாசிரியரான இளம்பூரணர் என்பவர் பயன்படுத்தியுள்ளார்.

செம்மொழித் தமிழிற்கான முயற்சிகள்

தமிழ்மொழி ஓர் உயர்தனிச் செம்மொழி என முதன்முதலாக கூறியவர் கால்டுவெல் (1856)

தமிழிற்கு செம்மொழித் தகுதி கோரிய முதல் தமிழர் பரிதிமாற் கலைஞர் (1887)

மதுரைத் தமிழ்ச் சங்க ‘செந்தமிழ்’ மாத இதழில் பரிதிமாற் கலைஞரின் ‘உயர்தனிச் செம்மொழி’ என்ற கட்டுரை வெளியிடப்பட்டது. (1901)

மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றி அதை இந்திய அரசுக்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தியது. (1918) மேலும் சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தமிழவேள் உமாமகேசுவரனார் (1923)

Answered by karthikaperumalsamy5
0

Answer:

mudivurai for katturai uyarthani chemozhi

Similar questions