இணையத்தை நீவிர் எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவீர்?
Answers
Answered by
1
இணையப் பாதுகாப்பு
- நமக்கான தனிப்பட்ட கணினி, திறன்பேசி போன்றவைகளின் மூலம் இணையம் சார்ந்த அனைத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
- நமது அனைத்துப் பயனர் கணக்குகளின் கடவுச்சொற்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
- பாதுகாப்பற்ற இணையத்தளங்களில் பதிவேற்றவோ, பதிவிறக்கவோ கூடாது.
- இணையத்தினை முடக்குதல், தகவல்களைத் திருடுதல் முதலிய இணையக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை பெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வரும் தகவல்களை தவிர, மற்றவைகளை மிகக் கவனமாக கையாள வேண்டும்.
- கணினி, திறன்பேசி போன்றவற்றினை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களுக்கு ஒய்வினை கொடுக்க வேண்டும்.
- நம்பகமற்ற தகவல்களை பெறும் போது கவனமாக இருக்க வேண்டும்.
Similar questions