கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்றினை தேர்வு செய்யவும். அ) பாலிலா இனப்பெருக்கத்தில் கேமீட்கள் ஈடுபடுகின்றன. ஆ) பாக்டீரியங்கள் மொட்டுவிடுதல் வழி பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன இ) கொனிடியங்களைத் தோற்றுவித்தல் ஒரு பாலினப்பெருக்க முறையாகும் ஈ) ஈஸ்ட் மொட்டு விடுதல் வழி இனப்பெருக்கம் செய்கின்றன.
Answers
Answered by
0
ஈஸ்ட் மொட்டு விடுதல் வழி இனப்பெருக்கம் செய்கின்றன
பாலிலா இனப்பெருக்கம்
- பாலிலா இனப்பெருக்கம் என்பது கேமீட்கள் ஈடுபடாமல் தன்னுடைய சொந்த சிற்றினங்களை பெருக்க பயன்படும் இனப்பெருக்க முறை என அழைக்கப்படுகிறது.
- பரிணாமத்தில் கீழ்நிலைத் தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் விலங்குகளில் பல்வகை பாலிலா இனப்பெருக்க முறைகள் காணப்படுகின்றன.
- கொனிடியங்களைத் தோற்றுவித்தல், மொட்டு விடுதல், துண்டாக்குதல், ஜெம்மா உருவாதல், மீள் உருவாக்கம் மற்றும் இரு பிளவுருதல் முதலியன சில பாலிலா இனப்பெருக்க முறைகள் ஆகும்.
- பாக்டீரியங்கள் இரு பிளவுருதல் முறையில் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன.
- ஈஸ்ட், ஹைட்ரா போன்ற உயிரிகள் மொட்டு விடுதல் முறையில் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன.
- பாலிலா இனப்பெருக்க முறையில் புற அமைப்பிலும் மரபிலும் ஒத்திருப்பதாக தோன்றும் உயிரினங்கள் நகல்கள் எனப்படுகின்றன.
Answered by
1
Answer:
Yeast reproduction done by eggs
Similar questions