India Languages, asked by ramadhithya06, 6 months ago

உனக்குப் பிடித்த தலைப்பில் எதுகை, மோனை, இயைபுடன் கவிதை எழுதுதல்,
(எடுத்துக்காட்டு​

Answers

Answered by theunknown5
2

Explanation:

மோனைத்தொடை:

பாடலின் ஒவ்வோர் அடியிலும் முதல் எழுத்து ஒன்றி (பொருந்தி) வருவது.

எ.கா:

உள்ளத்தில் உள்ளானடி – அது நீ

உணர வேண்டு மடி

உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்

உள்ளேயும் காண்பா யடி

அடிமோனை:

செய்யுள் முதல் அடியின் முதல் எழுத்து அடுத்தஅடிகளின் முதல் எழுத்தாக வருவது அடிமோனை ஆகும்.

இன எழுத்தும் மோனையாக அமையும்.

எ.கா:

நாணால் உயிரைத் துறப்பார்

நாண் துறவார்

சீர்மோனை:

1. இணை மோனை:

அளவடியில் 1,2 சீர்கள் முதல் எழுத்து ஒன்றி வருவது.

இன எழுத்தும் மோனையாக அமையும்.

எ.கா:

கமழத் கமழத் தமிழிசை பாடினாள்.

2. பொழிப்பு மோனை:

அளவடியில் 1, 3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது.

எ.கா:

நண்பற்றா ராகி நயமில் செய்தார்க்கும்

3. ஒருஉ மோனை

அளவடியில் 1,4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது.

எ.கா:

அணியன்றோ நானுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

4. கூழை மோனை

அளவடியில் 1, 2, 3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது.

எ.கா:

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

5. மேற்கதுவாய் மோனை

அளவடியில் 1, 3, 4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றிவருவது.

எ.கா:

பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்

6. கீழ்க்கதுவாய் மோனை

அளவடியில் 1, 2, 4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது.

எ.கா:

அவிர்மதி அனைய திருநுதல் அரிவை

7. முற்று மோனை:

அளவடியில் 1, 2, 3, 4 சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்றுமோனை எனப்படும்.

அனைத்துச் சீர்களிலும் மோனை இருக்கும்.

எ.கா:

கண்ணும் கருத்துமாய் கலைகளைக் கற்றான்

எதுகைத் தொடை

எதுகைத் தொடை என்பது ஒரு பாடலில் உள்ள அடிகள்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதாகும். இது மட்டுமன்றி, அடிகளில் உள்ள முதல் எழுத்துக் குறில் என்றால், எல்லா அடிகளிலும் குறிலாகவும், நெடில் என்றால் எல்லா அடிகளின் முதல் எழுத்தும் நெடிலாகவும் வரும்.

எ.கா:

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப்

பணிபூண்டு

வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள்

– பிள்ளைமொழி

வெள்ளைக் கவிகண்டு வெள்ளையென்

றெண்ணாமல்

உள்ளத்தில் கொள்வாள் உவந்து

அடி எதுகை:

செய்யுள் அடிகளின் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடிஎதுகை எனப்படும்.

எ.கா:

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரை பொன்

சீர் எதுகை

1. இணை எதுகை:

அளவடியில் 1, 2 சீர்களில் முதல் எழுத்து அளவொத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.

எ.கா:

காற்றாரைக் கற்றது உணரார்

2. பொழிப்பு எதுகை:

அளவடியில் 1, 3 சீர்களில் முதல் எழுத்து அளவொத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.

எ.கா:

வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வகை

3. ஒருஉ எதுகை: (1, 4)

எ.கா:

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு

4. கூழை எதுகை: (1, 2, 3)

எ.கா:

நன்னிற மென்முகை மின்னிடை வருத்தி

5. மேற்கதுவாய் எதுகை: (1, 3, 4)

எ.கா:

என்னையும் இடுக்கண் துன்னுவித் தின்னிசை

6. கீழ்க்கதுவாய் எதுகை: (1, 2, 4)

எ.கா:

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

7. முற்று எதுகை: (1, 2, 3, 4)

(அனைத்துச் சீர்களிலும் எதுகை இருக்கும்)

எ.கா:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு

இயைபுத்தொடை

பாடலில் அடிகள் தோறும் கடைசி எழுத்துகள் ஒன்றி வருவது.

எ.கா:

வாழிய தேவ பிரான்

எங்கும் நிறைந்த பிரான் – அடி இயைபு

பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் – பொழிப்பு இயைபு

அன்புக்கோர் உரைக்கல்லாய் அருளுக்கோர் நிலையில்லாய் – பொழிப்பு இயைபு

Similar questions