'தனித்திருப்றபாம் விழித்திருப்றபாம்' என் ற தழலப்பில் கட்டுழர வழரக.
Answers
Answer:
உலகெங்கும், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, 'கொரோனா' வைரஸ் நோய் குறித்து, மிகப் பெரிய அச்சத்தில் உறைந்து கிடக்கின்றனர். சில உண்மைகளை அறிந்து கொண்டால், மக்கள் மனதிலுள்ள பீதி விலகும்.ஒர் உயிரியல் அடிப்படை விதியை, அனைவரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும், வைரஸ் உட்பட, தங்கள் இனம் அழியாமல், இனப்பெருக்கம் செய்து கொள்வதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளன.பெரும்பாலான வைரஸ்களால், தனித்து இயங்கி, இனப்பெருக்கம் செய்து கொள்ள முடியாது. அவை, தங்களுக்கு இரையாக அமையும் உயிரினங்களின், 'செல்'களை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அவற்றின் துணையுடன் தங்களின் மரபணுக்களையும், உடலையும் வடிவமைத்து கொள்கின்றன.இந்த வைரஸ் பெருக்கத்தால், அவற்றின் புகலிடமாக அமைந்த உயிரினத்தின் செல்கள் வெடித்து அழியும். ஒரு கட்டத்துக்கு மேல், தாக்குப் பிடிக்க முடியாமல், புகலிடம் கொடுத்த உயிரினமும் அழியும். அதற்குள், வைரஸ் வேறு புகலிடத்தை தேடி கொள்ளாவிடில், அதுவும் அழிந்து போக நேரிடும்.தானும் வாழ்ந்து பெருக வேண்டும்; தனக்குப் புகலிடம் கொடுத்த உயிரினமும் முழுவதுமாக அழிந்து போகக் கூடாது என்பது தான், அனைத்து வைரஸ்களும் பின்பற்றும், சிறந்த உயிரியல் கோட்பாடு. முதலாளி வாழ்ந்தால் தான், அவரை அண்டி வாழும் தொழிலாளியும் வாழ முடியும் என்பது போன்ற கொள்கை தான் இதுவும்.இந்த உயிரியல்