அணுகு ஒட்டுதல் பற்றி சிறு குறிப்பு வரைக..
Answers
Answered by
0
அணுகு ஒட்டுதல்
- வேர்கட்டை என்பது இரண்டு தாவரங்களில் தரையுடன் தொடர்புடைய தாவரம் மற்றும் ஒட்டுத்தண்டு என்பது ஒட்டுதலுக்கு பயன்படுத்தப்படும் தாவரம் ஆகும்.
- அணுகு ஒட்டுதல் முறையில் வேர்கட்டை, ஒட்டுத்தண்டு ஆகிய இரண்டுமே வேரூன்றி காணப்படும்.
- ஒரு தொட்டியில் வளர்க்கப்படும் வேர்கட்டை ஆனது ஒட்டுத்தண்டுடன் நெருக்கமாக கொண்டு வரப்படுகிறது.
- ஒரே அளவு தடிப்பு உடைய வேர்க்கட்டை மற்றும் ஒட்டுத்தண்டு ஆகிய இரண்டிலும் ஒரு சிறிய சீவல் வெட்டப்பட்டு நீக்கப்படுகிறது.
- பிறகு வெட்டப்பட்ட பரப்புகளும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக கொண்டு வரப்பட்டு கட்டப்பட்டு ஒரு டேப்பினால் சுற்றப்படுகின்றன.
- 1 முதல் 4 வாரங்களுக்கு பிறகு வேர்கட்டையின் நுனியும் ஒட்டுத்தண்டின் அடியும் நீக்கப்பட்டு தனித்தனி தாவரங்களாக தொட்டியில் வளர்க்கப்படுகின்றன.
Attachments:
Similar questions