மண்முட்டு பதியம் மற்றும் காற்று பதியம் வேறுபடுத்துக.
Answers
Answered by
0
மண்முட்டு பதியம் மற்றும் காற்று பதியம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள்
மண்முட்டு பதியம்
- மண்முட்டு பதியம் ஆனது நெகிழ்வு தன்மை கொண்ட கிளைகள் கொண்ட தாவரங்களில் பயன்படுத்தப்படுகிறது.
- இந்த வகை தாவரங்களின் அடிகிளையை வளைத்து தரைப் பகுதிக்கு எடுத்துச் சென்று தண்டு மண்ணினுள் புதைக்கப்பட்டு, தண்டின் நுனி தரையின் மேல் காணப்படுகிறது.
- புதைத்த தண்டிலிருந்து வேர்கள் தோன்றிய பிறகு பெற்றோர் தாவரத்திலிருந்து புதைந்த பகுதி வெட்டப்பட்டு தனி தாவரமாக வளர்க்கப்படுகிறது.
காற்று பதியம்
- காற்று பதிய முறையில் தண்டு கணுப்பகுதியில் செதுக்கப்பட்டு, வளர்ச்சி ஹார்மோன்கள் சேர்க்கப்பட்டு வேர் உருவாதல் தூண்டப்படுகிறது.
- செதுக்கப்பட்ட பகுதி ஆனது ஈரப்பதமான மண்ணால் மூடப்பட்டு பாலிதீன் மூடப்படுகிறது.
- 2 முதல் 4 மாதத்திற்குள் அந்த கிளைகளிலிருந்து வேர்கள் தோன்றிய பிறகு, பெற்றோர் தாவரத்திலிருந்து செதுக்கப்பட் பகுதி வெட்டப்பட்டு தனி தாவரமாக வளர்க்கப்படுகிறது.
Attachments:
Similar questions
Chemistry,
3 months ago
Hindi,
3 months ago
Computer Science,
3 months ago
English,
7 months ago
History,
7 months ago
Social Sciences,
1 year ago