டபீட்டத்தின் பணிகளை பட்டியலிடுக.
Answers
Answered by
3
டபீட்டத்தின் பணிகள்
- மகரந்தப்பை சுவரின் உட்புற அடுக்கு டபீட்டம் ஆகும்.
- நுண்வித்து உருவாக்கத்தின் நான்மய நுண்வித்துகள் நிலையில் டபீட்டம் ஆனது தன் முழு வளர்ச்சி நிலையை அடைகின்றன.
- டபீட்டம் ஆனது வளருகின்ற நுண் வித்துகளுக்கு ஊட்டத்தினை அளிக்கிறது.
- யுபிஷ் உடலத்தின் (ubisch bodies) மூலமாக டபீட்டம் ஆனது ஸ்போரோபொலனின் உற்பத்திக்கு பயன்படுவதால் மகரந்தச் சுவர் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- போலன் கிட்டுக்கு தேவையான வேதிப் பொருட்களை டபீட்டம் தருகிறது.
- போலன் கிட்டு டபீட்டம் அளிக்கும் வேதிப் பொருட்கள் மகரந்தத்துகளின் பரப்பிற்கு கடத்தப்படுகிறது.
- எக்சைன் குழிகளில் சூலக முடியின் ஒதுக்குதல் வினைக்கான (rejection reaction) எக்சைன் புரதங்கள் (exine proteins) அமைந்து உள்ளன.
- டபீட்ட செல்களில் இருந்து எக்சைன் புரதங்கள் பெறப்படுகின்றன.
Similar questions
English,
4 months ago
India Languages,
4 months ago
English,
8 months ago
English,
1 year ago
Physics,
1 year ago