முன்னுரை - பாரதத்தில் கணினியின் வளர்ச்சி - கணினியின் பயன்கள் - பிரத்துறைகளில் கணினி - கல்வி நிலையங்களிலும் கணினி - முடிவுரை
Answers
Answer:
MARK me as BRAINLIST
Explanation:
இந்தியாவின் கணினிப் புரட்சி
முன்னுரை:
உலக நாடுகளிடையே இந்தியாவும் முன்னேற்ற மடைந்த வளர்ச்சியுற்ற நாடாக வேண்டும். இக்கனவு நனவாகுமா? இதற்குப் பாரதம் பல துறைகளிலும் நன்கு உழைக்க வேண்டும். அவற்றுள் ஒன்றுதான் கணினிப் புரட்சி. உலக நாடுகள் அனைத்தும் கணினித் துறையில் வளர்ந்த அளவிற்கு நாமும் உயர வேண்டும் என்ற எண்ணம் தான் 1984இல் கணினியைக் கொணர்ந்தோம். அன்றைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் கணினிக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலிடம் அளித்தார்.
பாரதத்தில் கணினியின் வளர்ச்சி:
முதன்முதலாக மும்பையிலுள்ள டாடா ஆய்வு மையம் தான் 1966இல் கணினியை செயல்படத் தொடங்கியது. நம் நாட்டிலுள்ள மின்னியல் கழகம் கணினிகளை வாணிக நோக்குடன் தயாரிக்கத் தொடங்கியது. மின்னியல் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் நல்கும் என வலியுறுத்தினார். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் அளவிற்கு மின்னியல் துறையை வளர்த்தார். தற்போது நல்ல அடிப்படையுடன் கணினித் துறை பல துறைகளிலும் நிலைபெற்று விட்டது.
கணினியின் பயன்கள்:
மக்கள் சபையிலும், மாநில சட்டமன்றங்களிலும் கூட கணினி பயன்படுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் கணினித் தொழில் நுட்பம் அங்கம் வகிக்கிறது. எல்லா மாநிலத் தலைநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. போர்க்கால அடிப்படையில் வங்கிகள் யாவும் கணினியை ஏற்றுக் கொண்டுவிட்டன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைக் கணினியைக் கொண்டு கண்காணிக்க உதவுகிறது. தேசிய காப்பீட்டுக் கழகம் பெரிய அளவில் கணினி மயமாக்கப்பட்டு விட்டது.
பிற துறைகளில் கணினி:
போக்குவரத்துத் துறையான விமான, இரயில் துறைகளில் இருக்கை முன்பதிவு செய்யவும், அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் செயல்படவும் கணினி பயன்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கூடிய முறைகள் கையாளப்படுகின்றன. மருத்துவத் துறையில் இரத்தப் பரிசோதனை, இருதய ஆய்வு, அறுவைச் சிகிச்சையிலும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது.
கல்வி நிலையங்களிளும் கணினி:
வணிகம், தொழில், தபால், தந்தி போன்ற பல துறைகளிலும் கணினிபுரட்சி ஏற்பட்டு விட்டது. கல்வி நிலையங்களில், பல்கலைக் கழகங்களில் கல்வி மேம்பாட்டுப் பணிகளைச் செய்து விடுகிறது. பலரும் கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம். பட்டமேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம். பட்ட மேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி அறிவு பெற்றுத் திகழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டது. இதன்மூலம் நம்நாட்டு இளைஞர்கள் மேனாடுகளில் சென்று வேலைவாய்ப்பு பெற்று நிரம்பப் பொருளீட்டும் வாய்ப்பும் பெற்றுள்ளனர். கணினித் தொழில் நுட்பம் செய்திகளை அனுப்பவும், தொலை தூர நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. கல்வி நிலையங்களில் கணினி ஒரு பாடத் திட்டமாக அமைந்துள்ளது. தற்கால இளைஞர்கள் கணினியை விரும்பிக் கற்று புரட்சி ஏற்படுத்துவதில் முனைந்துவிட்டனர்.
முடிவுரை:
கணினித்துறை, நம் நாட்டின் எதிர்காலத்தில் மிக விரைவாகவும், திறமையாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. பாரதத்தின் தொழில் வளர்ச்சிக்கேற்ப கணினித் துறை பெருமளவில் வளர்ச்சி பெறுவது இயற்கை நியதிகளில் ஒன்றாகிவிடும்.