வல்லினம் மிகும் மிகா இடங்களை உதாரணங்களை திரட்டுக
Answers
Answer:
வல்லெழுத்துகள் மிகும் இடங்கள்:
அ, இ, உ சுட்டெழுத்துகளின் பின்
அ + காலம் = அக்காலம்
இ + சமயம் = இச்சமயம்
உ + பக்கம் = உப்பக்கம் ('உ' எனும் சுட்டெழுத்து வழக்கில் இல்லை)
எ என்னும் வினா எழுத்தின் பின்
எ + பொருள் = எப்பொருள்
அந்த, இந்த, எந்த என்னும் அண்மை, சேய்மைச் சுட்டுகள் மற்றும் வினாச் சுட்டுகளின் பின்
அந்த + காலம் = அந்தக் காலம்
இந்த + சிறுவன் = இந்தச் சிறுவன்
எந்த + பையன் = எந்தப் பையன்
அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்
அப்படி + கேள் = அப்படிக் கேள்
இப்படி + சொல் = இப்படிச் சொல்
எப்படி + பார்ப்பது = எப்படிப் பார்ப்பது
இரண்டாம் வேற்றுமை உருபுக்குப்பின் (ஐ)
அவனைக் கண்டேன்
செய்யுளைச் சொன்னேன்
அவளைத் தேடினேன்
குறளைப் படித்தேன்
நான்காம் வேற்றுமை உருபுக்குப்பின் (கு)
அவனுக்குக் கொடுத்தேன்
அவளுக்குச் சொன்னேன்
என, ஆக என்ற சொற்களுக்குப்பின்
எனக் கூறினான்
அவனாகச் சொன்னான்
வல்லெழுத்து மிகா இடங்கள்
அது, இது, எது என்னும் சொற்களின் பின்
அது காண்
எது செய்தாய்
இது பார்
ஏது, யாது என்னும் சொற்களின் பின்
ஏது கண்டாய்
யாது பொருள்
அவை, எவை, இவை, யாவை
அவை பெரியன
யாவை போயின
அத்தனை, எத்தனை, இத்தனை
அத்தனை செடி (இங்கு அத்தனை என்பது வியக்கும் கருத்தினை வெளிப்படுத்தும் தொகுப்புக்குறி. இங்கு ஒற்று மிகாது.)
எத்தனை பசு (எத்தனையோ பசு என்று பொருள் படுவதால் ஒற்று மிகவில்லை.)
வெண்டை, சுண்டை என்று அத்தனைச் செடிகள்.
எத்தனைப் பசு. (எண்ணிக்கை கேட்கும் வினா)
அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு
அவ்வளவு தந்தாய்
எவ்வளவு செய்தாய்
இவ்வளவு துணிவு
அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின் (இஃது எழுவாய்த்தொடர் ஆகையால் மிகாமலும், குற்றியலுகரச் சுட்டு ஆதலின் மிக்கும் வரும்)
அங்கு செல்
எங்கு கற்றாய்
இங்கு பார்
சில மென்றொடர்க் குற்றியலுகரத்திற்குப்பின்
அன்று சொன்னான்
என்று தந்தான்
இன்று கண்டான்
மென்று தின்றார்
வந்து சேர்ந்தான்
சில வினையெச்ச விகுதிக்குப்பின்
நடந்து சென்றான் [8]
தந்து போனான்
சென்று திரும்பினான்
Explanation:
மூலம் விக்கியாருடையது