ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
Answers
Answer:
இளைஞர்களின் வீரம்:
வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப் படுத்தப்படுபவை மாடுகள். முல்லை மற்றும் மருத நிலங்களில் கால் கொண்டு தமிழர் தம் வாழவோடு பின்னிப் பிணைந்து பண்பாடாகியுள்ளது ஏறுதழுவுதல். ஏறுதழுவுதல் தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு; இளைஞர்களின் வீரத்தைப் பெருமிதப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வு. இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
வன்மமும், போர்வெறியும்:
மேலை நாடுகளுள் ஒன்றான ஸ்பெயினில், காளைச் சண்டை தேசிய விளையாட்டாகக் கொண்டாடப்படுகிறது. அதில் காளையை அடக்கிக் கொல்பவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவர். காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் காளை கொல்லப்படுவதும் உண்டு. மேலை நாடுகளில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் காளை விளையாட்டு, மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையுமே வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.
அன்பும் வீரமும்:
தமிழகத்தில் நடைபெறும் ஏறுதழுவுதலில் காளையை அடக்குபவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக்கூடாது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர். அடக்க முடியாத காளைகளும் உண்டு. எனவே, காளைகளும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
Explanation:
plz follow me nd mark me as brainiest