Science, asked by nandusoundar30, 8 months ago

தமிழின் சொல்வளம் பற்றியும் அவற்றின் நாகரிகத்தைப் பற்றியும் விளக்குக ​

Answers

Answered by Anonymous
4

Answer:

பொருள் வளம், சுவை வளம், சொல் வளம் என, எல்லாவற்றிலும் குறையே காணமுடியாத மொழி, தமிழ்மொழி. இதன் சிறப்பை, சில சொற்களின் உருவாக்க அடிப்படையில் கண்டு வியக்கலாம்.

உண்ணுகின்ற சோற்றைக் குறிக்கும் சொல், அவிழ்பதம். அதாவது பதமாக வெந்து நிற்பதைக் குறிப்பது. அவிழ்தல் என்றால், பல பொருள்கள் உண்டு. மலர்தல், விரிதல், விடுபடல். இங்கே சோறு, அரிசி எனும் நிலையிலிருந்து மாறி, நீரில் வெந்து மலர்வதை அழகாக அவிழ்பதம் என்ற சொல்லால் குறிக்கின்றனர்.

* காலைத் தொட்டுக்கொண்டு நம்மை பல துன்பங்களிலிருந்து காக்கின்ற தோல் எனும் பொருளில் செருப்பிற்குத் 'தொடுதோல்' எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். செருப்பு, காலணி என்பதைவிட, தொடுதோல் என்பது நெருங்கிய உறவுநிலைபோல உணர வைக்கிறது.

* வண்டைப் பறவை இனத்தில் சேர்த்திருக்கின்றனர். வண்டு இரண்டிற்கும் மேற்பட்ட கால்களைக் கொண்டிருப்பதால், அதனை பல்காற்பறவை (பல கால்களையுடைய) என்றனர். இன்னும் ஒரு புலவர், (பெயர்: 'பெருவழுதி' நூல், நற்றிணை. 'அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்') வண்டு ஆறு கால்களைக் கொண்டிருப்பதால், 'அறுகால் பறவை' என்று சொல்லி இருப்பது பெருமையான சொல்லாக்கம்.

முள்போன்ற கருவி எனும் பொருளில், யானையைக் கட்டுப்படுத்தும் அங்குசத்தை 'கவை முட்கருவி' என்றனர். கவை என்பது வளைவு. ஏரைக் கொண்டு நிலத்தை உழுது, அதில் பயிரிட்டு உண்பவர்கள் உழவர்கள். இதைக் குறிக்க 'ஏரின் வாழ்நர் ' எனும் சொல் அழகுற உருவாக்கப்பட்டுள்ளது.

சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை

Explanation:

please mark me as the brainliest

Similar questions