India Languages, asked by vasvini2000gmailcom, 5 months ago

இந்திய வனமகன் ஜாதவ் பயேங் பற்றி எழுது

Answers

Answered by ReolJose
5

Answer:

சாதவ் பயேங்க் (Jadav Payeng) ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் பிரம்மபுத்திரா நதி அருகே ஒரு வனத்தையே உருவாக்கியுள்ளார். அப்பகுதிக்கு இவருடைய செல்லப்பெயரான முலாய் என்பதினை இட்டு, முலாய் வனப்பகுதி என்று அழைக்கின்றனர். இது இந்தியாவிலுள்ள அசாமில், கோகிலாமுக் என்ற இடத்திற்கு அருகே 100 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதியாகும். 1979-களின் துவக்கத்தில் ஆரம்பித்த இவருடைய மரம் நடுதல் தற்போது ஐந்து புலி, மூன்று காண்டாமிருகம், ஊர்வன, பறவைகள் உள்ளிட்ட என்னற்ற விலங்குகளின் வாழ்விடமாக மாற்றியிருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மர வகைகளையும் நட்டு வளர்த்துள்ளார். இவருடைய எதிர்காலத் திட்டம் இவ்வனப்பகுதியை உலகின் மிகப்பெரிய நதிக்கரைத் தீவாக மாற்றுவதாகும்.

Similar questions