இரட்டை காப்பியங்கள் யாவை
Answers
Answered by
3
மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
விளக்கம்:
- சிலப்பதிகாரமும், மணிமேகலையும் காலத்தை வென்று வாழும் சிறந்த இலக்கியங்களாகத் திகழ்கின்றன.
- சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார்
- கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.
- இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
- “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் புகழ்கிறார்.
- மணிமேகலையின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- இந்நூலில் காண்டப் பிரிவு இல்லை. முப்பது காதைகள் மட்டும் உள்ளன .
முதல் காதை =விழாவறைக் காதை
இறுதி காதை = பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
Answered by
0
Answer:
இரட்டை காப்பியங்கள் யாவை?
Similar questions