History, asked by niharikalokesh2007, 8 months ago

இந்திரவிழா பற்றிய செய்திகடளத் சதாகுத்து எழுதுக

Answers

Answered by ushajosyula96
1
  • தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வரும் திருவிழா தான் பொங்கல் பண்டிகை.
  • இந்த பண்டிகை மழைக்காக இந்திரனை வணங்கி, பின்னர் சூரியனுக்கு நன்றி சொல்லும் விழாவாக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் திருவிழா பொங்கல் திருவிழாதான். இந்த பண்டிகை விவசாயத்திற்கு உதவி புரியும் இயற்கைக்கும், கால்நடை உயிரின்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா சங்ககாலத்திலிருந்தே இந்திர விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது விவசாயத்திற்கு மும்மாரி மழை பொழிய வேண்டும் என மழை கடவுளாக பார்க்கப்படும் இந்திரனை வணங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்த இந்திர விழா 28 நாட்கள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு மழை பொழிய, அறுவடை செய்ய, விவசாயம் செழிக்க சூரியன் மிக முக்கியம் என்பதை உணர்ந்த பிறகுதான் இயற்கை சூரியனை வணங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மார்கழி கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் வீட்டை சுத்தம் செய்து, பழைய பொருட்களை கழித்துவிடும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்கடுத்த நாள் தான் தை முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்டுகிறது. இந்நாளில் இயற்கைக்கு முக்கியமாக சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக சர்க்கரை பொங்கல் வைத்து இயற்கைக்கு படைப்பார்கள். சூரியனுக்கு நன்றி செலுத்துவார்கள். அடுத்த நாள் மாட்டு பொங்கல், அன்றைய நாளில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பொங்கல் வைத்து அதனை கால்நடைகளுக்கு படைப்பார்கள். அடுத்த நாள், காணும் பொங்கல். இன்றைய நாளில் உறவினர் வீட்டிற்க்கு சென்று அவர்களுடன் சந்தோஷத்தை பகிர்ந்து உறவுகளை வளர்க்கும் நாளாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோர் இந்நாளில் குடும்பத்தாருடன் வெளியூர் அல்லது வெளியிடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

Similar questions