English, asked by sureshkanchi7377, 7 months ago

மாநிலக்கல்லூரி புணர்ச்சி விதி கூறுக​

Answers

Answered by kheshickaabg
1

Answer:

see down mark as brainliest.....

Explanation:

புணர்ச்சி அல்லது சந்தி (சமஸ்கிருதம்: संधि, "சேர்த்தல்") என்பது இரண்டு சொற்கள் இணையும்போது உச்சரிப்பில் உண்டாகும் மாற்றமாகும்.[1] இவை மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் இந்த உச்சரிப்பு மாற்றம் எந்தவொரு மொழியிலும் இயற்கையாக நிகழும். பெரும்பாலான மொழிகளில் எழுத்துவடிவம் சந்தியைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் மற்றும் சமக்கிருத மொழிகளில் எழுத்திலக்கணத்தில் சந்தி ஒரு விதிமுறையாக உள்ளது.

இரண்டு சொற்கள் இணையும் போது முதலில் உள்ள சொல் நிலைமொழி என்றும் வந்து இணையும் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். தொல்காப்பியத்தில் இவை நிலைமொழி- குறித்துவரு கிளவி என குறிப்பிடப்படுகின்றன. சொற்கள் புணரும்போதும் ஒரு எழுத்து தோன்றுதல் அல்லது சொல்லின் இறுதி எழுத்து வேறொரு எழுத்தாக மாறுதல் அல்லது ஒரு எழுத்து மறைதல் (கெடுதல்) போன்ற மாறுபாடுகள் தோன்றும். தமிழ்மொழியில் தோன்றும் இந்த மாறுபாடுகளை விகாரம் அல்லது திரிபு என வழங்குகிறோம். மாறுபாடுகள் தோன்றாமல் சொற்கள் புணரும் நிலையை இயல்புப் புணர்ச்சி என்கிறோம்.

இலக்கணத்தில் புணர்ச்சி என்பது சொற்கள் சேர்ந்துவருவதாகும். சொற்கள் தனிச்சொற்களாயிருக்கும்போது அவற்றை தனிமொழிகளென்றும், அவை சேர்ந்திருக்கும்போது அவற்றை தொடர்மொழிகளென்றுஞ்சொல்கிறோம். தொடர்மொழிகளில் இரண்டோ இரண்டுக்குமேற்பட்டசொற்களோ இருந்தாலும், அவற்றை ஒரு தனிச்சொல்லைப்போல ஒன்றாகத்தான்கொள்ளவேண்டுமேயன்றி, புணர்ந்துள்ளசொற்களை தனிச்சொற்களாக பிரித்தெழுதுதல் கூடாது.

அவ்வாறு பிரித்துவிட்டால், பிரிந்தசொற்கள் ஒவ்வொன்றும் தனிமொழிகளாகவேகொள்ளப்படுமேயன்றி, தொடர்மொழியென சொல்லப்படமாட்டா.

தொடர்மொழிகள் பேச்சுவழக்கில் உள்ளவையே. நாம் பேசும்போது சிலசொற்களை தனித்தும் சிலவற்றை சேர்த்தும்பேசுவதை இயல்பாய்ச்செய்வோம். ஒருவருடைய பேச்சை கேட்டுப்பார்த்தாலோ அல்லது இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களதுபேச்சை கேட்டுக்கொண்டிருந்தாலோ அவற்றில் சொற்களுட்சில தனியாகப்பேசப்படுவதையும் சில சேர்த்துப்பேசப்படுவதையும் அறிந்துகொள்ளலாம்.

அவ்வாறு சொற்களை சேர்த்துப்பேசுவது எதற்காகவென்பதை ஆய்ந்துபார்த்தால், அது ஒருவர் சொல்லவரும் பொருளை சரியாகச்சொல்வதற்காகவே அவ்வாறு சேர்த்துச்சொல்கிறாரென்பதை அறிந்துகொள்ளலாம். அதாவது, சேர்த்துச்சொல்லவேண்டியசொற்களை சேர்த்துச்சொல்லாமல், அவற்றை தனிச்சொற்களாய்ச்சொல்லிவிட்டால்,சொல்லவந்த பொருள் வேறாகிவிடும்.

வேறாய்ச்சொல்வதானால், சொற்களை சேர்த்துச்சொல்லும்போது என்னபொருள்வருமோ அந்த பொருளானது, அவற்றை பிரித்துச்சொல்லும்போது வராது! ஆகையால், சேர்த்துச்சொல்லவேண்டும்போது சேர்த்துச்சொல்வதும், பிரித்துச்சொல்லும்போது பிரித்துச்சொல்வதும் தேவையானதாகும்.

நம்மைப்போலவே குழந்தைகளும் சிறுவர்களுங்கூட பேச்சில் இதை சரியாகச்செய்வரென்பதை அவர்களது பேச்சை கவனித்துப்பார்த்தால் எவரும் அறிந்துகொள்ளலாம். இது எதனால் இவ்வாறு நடக்கிறதென்றால், நம் மொழியை பேசத்தொடங்கும்போதே, அது சொல்லும் பொருள் என்னவென்பதை நாம் அறிந்துகொள்வதனாலேதான். ஒரு குழந்தை 'அத்தைவீடு' எனச்சொல்கிறதென்றால், அந்த குழந்தைக்கு அது 'அத்தையினுடையவீடு' என்னும் பொருள் புரிந்திருக்கிறதென்பது பொருள்.

இதை சொல்லும்போது, 'அத்தை வீடு' என இரண்டுசொற்களாக அந்த குழந்தை பிரித்துச்சொல்லாதென்பதை எண்ணிப்பாருங்கள். அதேகுழந்தை, 'அத்தை வீடுவரைந்தார்' எனச்சொல்வதானால், 'அத்தை 'வீடு' ஆகியசொற்களுக்கிடையில் இடம்விட்டுப்பேசும். இங்கே 'அத்தைவீடுவரைந்தார்' என்று சேர்த்துச்சொல்வது பொருந்தாதென்பதை அந்த குழந்தை அறியும். அதேநேரத்தில், 'வீடுவரைந்தார்' என்பதில், 'வீடு' 'வரைந்தார்' ஆகிய இவையிரண்டும் சேர்த்துச்சொல்லப்படுவதைப்பாருங்கள்.

'அத்தைவீடு' 'வீடுவரைந்தார்' ஆகியவற்றில் இரண்டுசொற்கள் சேர்த்துச்சொல்லப்பட்டதால், இவை தொடர்மொழிகள். 'வீடு' என்றசொல்லானது, முதலில் 'அத்தை' என்றசொல்லுடன்சேர்ந்தும் பிறகு 'வரைந்தார்' என்றசொல்லுடன்சேர்ந்து தொடர்மொழியானது. 'அத்தைவீடு' என்பதில் இது 'அத்தை' என்னும் சொல்லுக்கு பின்னால்வந்துசேர்ந்தது, 'வீடுவரைந்தார்' என்பதிலோ முன்னாலேநின்று, 'வரைந்தார்' என்னுஞ்சொல்லை தன்னையடுத்து சேர்த்துக்கொண்டது.

Similar questions