English, asked by gokul2543, 9 months ago

மூவகை மொழிகளை விளக்குகள்​

Answers

Answered by answersbrainly982
11

Answer:

தனிமொழி

தொடர்மொழி

பொதுமொழி

தனிமொழி தொகு

ஒருசொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது, தனிமொழி.

எ.கா: வா, கண், செய்தான்

தொடர்மொழி தொகு

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி.

எ.கா: படம் பார்த்தான்.

பொதுமொழி தொகு

ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது, பொதுமொழி எனப்படும்.

எ.கா: அந்தமான், பலகை, வைகை

‘அந்தமான்’ என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த+மான் எனப் பிரிந்து நின்று அந்த மான் (விலங்கு) என வேறு பொருளையும் தருகின்றது.

Explanation:

ஓர் எழுத்து, தனியாகவோ பல எழுத்துகள் தொடர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும். பதம், மொழி, கிளவி என்பன ஒருபொருள் தரும் பலசொற்கள்.

Answered by ChitranjanMahajan
0

மூவகை மொழிகள்:

ஒரு எழுத்து தனியாகவோ அல்லது பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

தமிழ்ச் சொற்களை தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகையாகப் பிரிவுபடுத்துவர்.

தனிமொழி:

  • ஒருசொல் தனித்து நின்று தன் பொருளை உணர்த்தி வருவது தனிமொழி எனப்படும்.
  • இது பெயர், வினை, இடை, உரி என்ற நால்வகைச் சொற்களிலும் அமையும்.
  • இதனை ஒருமொழி எனவும் வழங்குவர்.
  • நிலம், முருகன்-பெயர்த் தனிமொழி
  • நட, போ-வினைத் தனிமொழி
  • கொல்-இடைத் தனிமொழி
  • சால-உரித் தனிமொழி

தொடர்மொழி:

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி எனப்படும்.
  • எ.கா: படம் பார்த்தான், அவன் எங்கள் வீட்டிற்கு வந்தான்.
  • தொடர்மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருளைத் தரும்.

பொதுமொழி:

  • ஒரு சொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று மற்றொரு பொருளையும் தருவது பொதுமொழி எனப்படும்.
  • தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவதால்,இது பொதுமொழி எனப்படுகிறது.
  • எ.கா: அந்தமான், பலகை,
  • அந்தமான்-ஒரு தீவு
  • அந்த மான்- ஒரு வகை விலங்கு

#SPJ3

Similar questions