சிறந்த தலைவருக்குரிய பண்புகள் யாவை என நீங்கள் கருதுகிறீர்கள்
Answers
Answer:
சிறந்த தலைமைத்துவ திறன்கள்
1. சுய ஊக்குவிப்பு
2. தரநிலைகள்
3. நம்பிக்கை
4. நேர்மறை
5. பொறுப்புடைமை
6. தைரியம்
7. நிச்சயத்தன்மை
8. நல்லகுணம்
9. நகைச்சுவை
10. வேட்கை
11. நேர்மை
12. ஒரு மரியாதைக்குரிய
13. விரும்பப்படுபவராக
14. நன்னெறி
15. விசுவாசம்
சிறந்த தலைவருக்குரிய பண்புகள் :
(i) செயல்பாடுகள் நல்லதாக இருக்க வேண்டும். நல்ல குண இயல்புகள் கொண்டு இருக்க வேண்டும். வெறும் அறிவு மட்டுமே இருந்தால் ஒருவருக்கு தலைமைப்பண்பு இருக்கின்றது என்ற கருத முடியாது. அறிவு, அனுபவம், மனிதர்களை மதித்து நடந்து கொள்ளும் பண்பு ஆகியவற்றைக் கொண்டவரே சிறந்த தலைவர்.
(ii) மக்களின் வறுமைகளையும், இன்னல்களையும் போக்குபவரே சிறந்தத் தலைவர். கீழ்மட்டத்திலுள்ள மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும்; மேல் மட்டத்திலுள்ள மக்களின் நலனையும் பேணி காக்க வேண்டும்.
(iii) இருவரையும் சமமாக நடத்த வேண்டும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பிரிக்காமல், இருவரும் ஒருவரே என அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவருக்குரிய பண்புகளில் ஒன்றாகும்.