பண்புடைய வராக வாழ்வதற்குரிய நல்ல செயல்கள் யாவை?
Answers
Answer:
Ur answer is given here, for any other information ...
contact 9025992787
Explanation:
யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.
சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
எண்களைப் போல் யாரும் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகளுடன் யாரிடமும் எளிமையாக பழுகுதலே பண்புடைமை என்பது வழக்கு.
Answer:
அன்புடையவராக இருத்தல், நல்லியல்புகள் அமைந்த குடும்பத்தில் பிறத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழ்வதற்குரிய நல்ல செயல்கள் ஆகும்.
Explanation:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
(அதிகாரம்:பண்புடைமை குறள் எண்:992)
'ஆன்ற குடிப்பிறத்தல்' என்ற தொடர்க்குக் குடிப்பிறத்தல், அமைந்த குடியின்கண் பிறத்தல், நெறி அமைந்த குடிப்பிறப்பு, உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தல், நல்ல குடியிலே பிறந்து உலகத்துக் கேற்க நடக்கிறது, உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல், சிறந்த குடியிற்பிறந்தார்க்கேற்ற நற்செயல்களையுடையராதல், கல்வி கேள்விகளில் சிறந்த குடிப்பிறத்தல், குடிக்கேற்ப ஒழுகுதல், நல்லியல்புகள் அமைந்த குடிப்பிறப்பிற்கேற்ற குணஞ்செயல்களுடையனாதல், நல்ல குடியிற் பிறந்தவன் என்று போற்றப்படுவது, சிறந்த குடியில் பிறத்தல், உயர்ந்த குடிப்பிறப்பு, நற்குணங்கள் அமைந்த குடியின் கண் பிறத்தல், உயர்ந்த குடிப்பிறப்பு உடையவராக இருத்தல், அருமை பெருமை மிக்க நற்குடிப் பண்போடு நடந்துகொள்ளுதல், எல்லா நல்லிணக்கமும் அமைந்த குடியிற் பிறத்தல், உயர்குடிப் பிறப்பு, நல்ல குடும்பம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
ஆன்ற என்ற சொல் அமைந்த என்ற பொருள் தரும். ஆன்ற குடிப்பிறத்தல் என்பது அமைந்த குடும்பத்தில் பிறத்தல் என்ற பொருளது. அமைந்தது எது? நெறியில் அமைந்ததா? உலகத்தோடு அமைந்ததா? நல்லியல்புகள் அமைந்த என்பது பொருத்தம். எனவே ஆன்ற குடிப்பிறத்தல் என்பது நல்லியல்புகள் அமைந்த குடும்பத்தில் தோன்றியது எனப் பொருள்படும். நல்லகுடும்பத்தில் தோன்றியவர் இயல்பாக நற்பண்புகளைப் பெற்றிருப்பர் என்பது பொதுவான கருத்து. அமைதல் என்பதற்கு ஒத்து வருதல் எனப் பொருள் கூறினார் பரிமேலழகர்; ஒத்து வருதல் என்பது உலகத்தோடு ஒத்து ஒழுகுதல் எனப் பிறர் விளக்கினர்.