India Languages, asked by spd345, 9 months ago

தமிழ் தெரிந்தவர்கள் இருகீர்கர்களா?​

Answers

Answered by Anonymous
1

Answer:

கவலைப்பட வேண்டாம் நண்பரே நான் இங்கே இருக்கிறேன் நான் தமிழ்நாட்டிலிருந்து வந்தவன். எனக்கு தமிழ் பேசத் தெரியும்.

Answered by harshilvetri
1
ஆம் இருக்கின்றோம்
எனக்கு நூல் படிக்கும் பழக்கம் கிடையாது. மீறி ஏதாவது ஒரு நூலை எடுத்து படிக்க தொடங்கினால் சிறிது நேரத்திலேயே உறங்கிவிடுவேன். நூல் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் என்னால் என் கண்களை நீண்ட நேரம் நூலில் மேய விட முடியாது. தவிர இப்போது இணையம், வேலை, குடும்பம் என்று பல திசைத்திருப்பங்களும் உண்டு.

2018'ஆம் ஆண்டு தீபாவளிக்கு நீண்ட நாட்கள் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டுவிட்டு ஊருக்கு சென்றிருந்தேன். எனவே அலுவலக வேலையிலிருந்து முழுமையாகவும், இணையத்திலிருந்து நிறையவும் விடுப்பட்டிருந்தேன். குடும்பத்துடன் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் ஒரு நூலை எடுத்து படித்தேன். விடுப்பு முடிவதற்குள் அந்த நூலை நான் படித்தே முடித்துவிட்டேன். இவ்வளவு குறுகிய காலத்தில் நான் எந்த நூலையும் படித்து முடிந்ததில்லை என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

இவ்வளவு வேகத்துடன் நான் படித்த அந்த நூலின் பெயர் "அறியப்படாத தமிழ்மொழி". இதை எழுதியவர் எனது டுவிட்டர் நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் (KRS | கரச (@kryes) | Twitter). அது மட்டுமல்லாது அவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். சமக்கிருதமும் முறையாக பயின்றவர். அந்த நூலில் நிறைய மொழி அரசியல் பேசியிருந்தார். தமிழ் மொழிக்குள் சமக்கிருதம் திணிக்கப்பட்ட அரசியலும் அதனால் திரிந்த நமது வழிபாட்டையும் பண்பாட்டுக் கூறுகளையும் சுவையாக விளக்கியிருந்தார். நூல் முழுவதும் உரைநடை அல்லது கட்டுரை போக்கு மேற்கொள்ளாது பேசும் நடையில் எழுதியிருந்தது புதுமையாக இருந்தது. இந்த நூலை அனைவரும் படிக்க வேண்டும்; மற்றவர்களுக்கும் தமிழ் உண்மைகளைப் பரப்ப வேண்டும்.


Please mark me as brainlist
Similar questions