Chinese, asked by tssriramsankar, 4 months ago

இலக்கிய நயம் பாராட்டுக.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடும் காணீர்
- பாரதியார்​

Answers

Answered by durghadevi2003
6

Answer:

nayam paaratu tharuga..

Answered by sshamitha685
27

மையக் கருத்து:

இப்பாடலில் தேசியக்கவி‌ பாரதியார் பெண்கள் கல்வி கற்றால் அறியாமை என்னும் இருள் நீங்கி அறிவுடைமை என்னும் வெளிச்சம் பெறும் எனப் பெண்கல்வி யின் ‌அவசியத்தை‌ மையக்கருத்தாகப் பாடியிருப்பது பாராட்டுக்குரியது .

திரண்ட கருத்து:

உலகின் அனைத்தையும் படைத்த இறைவன் பெண்களுக்கு நல்ல அறிவையும் தந்துள்ளார். ஆனால் உலகின் உள்ள சில மூடர்கள் அவர்களின் அறிவு‌ பயன் படாது எனக்கருதி அழித்தனர் . ஆண்களும் பெண்களும் சமுதாயத்தின் இரு கண்கள் போன்றவர்கள். எனவே அத்தகைய கண்களில் ஒன்றை‌க்குத்தி காணும் காட்சியைக் கெடுத்து விடலாமா? பெண்கள் அறிவை வளர்த்தால் உலகம் அறியாமை (பேதைமை) நீங்கி அறிவு‌ வெளிச்சம் பெறும் எனப் பாடி இருப்பது சிறப்புக்குரியது.

தொடைநயம்:

மோனைத்தொடை:

பெண்ணுக்கு -பேனி

மண்ணுக்கு-மாதர்

எதுகைத்தொடை:

பெண்ணுக்கு- மண்ணுக்கு

கண்கள்- பெண்கள்

சந்தநயம் :

சிந்துப்பா வகையில் அமைந்து செப்பலோசை அமைய பாடி இருப்பது பாராட்டுக்குரியது.

அணிநயம்:

‌ பெண் கல்வியின் தேவையை உள்ளதை உள்ளவாறு பாடியிருப்பதால் தன்மை அணி ( இயல்பு நவிற்சி அணி) பயின்று வந்துள்ளது சிறப்பிற்குரியது.

Similar questions