Computer Science, asked by harininagaraj03, 7 months ago

சிலம்புகழி நோன்பு என்றால் என்ன​

Answers

Answered by sabari0730
9

மணம் புரிவதற்கு முன்னர் மன மகளது காலில் பெற்றோர்கள் அணிந்திருக்த சிலம்பை நீக்கு வதற்குச் செய்யப்பெறும் சடங்கே சிலம்புகழி நோன்பு என்பது.

Answered by HrishikeshSangha
0

சிலம்புகழி நோன்பு:

  • சிலம்புகழி நோன்பு என்பது ஒரு பண்டைய தமிழர் திருமண மரபாகும்.
  • மணமகளின் காலில் அவள் பெற்றோர்கள் அணிவித்திருந்த சிலம்பை, மணம் புரிவதற்கு முன்னர் நீக்குவதற்குச் செய்யும் ஒரு சடங்காகும்.
  • பண்டைய தமிழர்கள் மணமாகாத தம் பெண்களுக்குக் காலில் சிலம்பை அணிவிப்பர் இதனால் அப்பெண் திருமணம் ஆகாதவள் என்பதும் திருமணத்தை எதிர்பார்த்தவண்ணம் இருக்கிறாள் என்பதும் ஓர் அறிவிப்பாகப் பெறப்படும்.
  • ‘சிலம்பு காலில் இல்லையென்றால் அவர்கள் மணம் புரிந்தவர்கள் எனத் தெரிந்துகொள்ளலாம்.
  • எனவே வேறு ஆண்கள் அவர்களை மண விருப்புடன் பார்க்கலாகாது’ என்ற மனநோக்கு புலப்படும்.
  • திருமணம் புரிந்து கொள்ளும் பொழுது அச்சிலம்பினைக் கழற்றி ஒரு சடங்கு முறையும் செய்வர்.
  • மணநாளுக்கு முன்னாள் நிகழும் இச்சடங்கு முறையை ‘சிலம்புகழி நோன்பு’ என்பர்.
  • பெண்களுக்கு திருமணமாகாமுன் பெற்றோர் அணிவித்த சிலம்பை ‘கன்னிமைச் சிலம்பு’ என்றும், திருமணம் நிகழும்போது கணவன் அணியும் சிலம்பை ‘கற்புச் சிலம்பு’ என்றும், கணவன் தரும் சிலம்பை அணியும் திருமணம் ‘சிலம்பு கழீ இய மணம்’ என்றும் கூறப்படும்.

#SPJ3

Similar questions