India Languages, asked by moonstrucksparkle3, 7 months ago

உங்கள் பள்ளி நூலகத்திற்கு தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்தினைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக​

Answers

Answered by kbrindha454
117

அனுப்புநர்

திருமதி.லித்ய சிபி,

நூலகப் பொறுப்பாளர்,

டான்போஷ்கோ பள்ளி,

காந்தி நகர்,

சென்னை.

பெறுநர்

பதிப்பக உரிமையாளர்,

நெய்தல் பதிப்பகம்,

வடக்குத் தெரு,மதுரை-625020.

மதிப்பிற்குறிய பதிப்பக உரிமையாளருக்கு,

பொருள்:அகராதி நூல் அனுப்புதல் சார்பு,

நான் டான்போஷ்கோ பள்ளி நூலகத்தில் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறேன் .எங்கள் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன.ஆனால் தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி நூல் இல்லை. நூலகத்திற்குப் படிக்க வரும் மாணவர்கள் இவ்வகராதி தேவைப்படுகிறது.

எனவே தாங்கள் தங்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி நூல் பத்தினைப் பதிவஞ்சலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அனுப்ப வேண்டிய நூல்:தமிழ்-தமிழ்-ஆங்கிலம்

எண்ணிக்கை:10

அனுப்ப வேண்டிய முகவரி:

திருமதி.லித்ய சிபி,

நூலகப் பொறுப்பாளர்,

டான்போஷ்கோ பள்ளி,

காந்தி நகர்,சென்னை.

தாங்கள் அனுப்பும் புத்தகங்களுக்கான தொகையினைக் காசோலைமூலம் அனுப்பி வைக்கிறேன்.

நன்றி

if its satisfy please follow me and make me as brainlist

Answered by yuvarajravindrano7
36

Answer:

அனுப்புநர்

மா.இனியன்,

அரசு ஆண்கள் மேல்நிைைலப்பள்ளி,

நாவலூர்.

பெறுநர்

மேலாளர் அவர்கள்,

நெய்தல் பதிப்பகம்,

மதுரை – 16.

ஐயா,

பொருள் : நூலகத்திற்கு அகராதி அனுப்புதல் தொடர்பாக

வணக்கம். எங்கள் பள்ளி நாவலூரில் அமைந்துள்ளது. சுமார் 500 மாணவர்கள் பயில்கின்றோம். எங்கள் பள்ளி நூலகத்திற்கு, தங்கள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள, தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பின்வரும் முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்பும்படி வேண்டிக்கொள்கிறேன்.

நாள் : 06.08.18

இடம் : நாவலூர்

இப்படிக்கு,

மா. இனியன்.

அகராதிகள் அனுப்ப வேண்டிய முகவரி

மா. இனியன்,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

நாவலூர், வேலூர் மாவட்டம்.

நன்றி!

Similar questions