பைங்கிளி
முத்திரையும்
சாமையும் இந்நிலம்
குருளை
அதிர் குரல்
மன்னிய
கருமுகில்
Answers
ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! உங்கள் பேச்சிலும் எழுத்திலும் மரபுப் பிழைகள் வராமல் இருக்க கீழ்க்காணும் நம் தமிழ் மரபுகளை நீங்கள் அறிந்துகொள்ளுதல் வேண்டும்.
பறவைகள் ஒலி மரபு
விலங்குகள் ஒலி மரபு
ஆந்தை அலறும்
ஆடு கத்தும்
கூகை குழறும்
எருது எக்காளம் மிடும்
காகம் கரையும்
எலி கீச்சிடும்
மயில் அகவும்
குதிரை கனைக்கும்
குயில் கூவும்
குரங்கு அலப்பும்
கோழி கொக்கரிக்கும்
சிங்கம் முழங்கும்
கிளி பேசும்
நரி ஊளையிடும்
புறா குனுகும்
நாய் குரைக்கும்
சேவல் கூவும்
புலி உறுமும்
வண்டு முரலும்
யானை பிளிறும்
அடுத்து, வினை மரபு (செயல் மரபு) பற்றியும் தெரிந்துகொள்க.
வினை மரபு
சோறு உண்டான்
பாய் பின்னினர்
முறுக்குத் தின்றான்
ஆடை நெய்தார்
பால் பருகினான்
சுவர் எழுப்பினர்
தண்ணீர் குடித்தான்
மரம் வெட்டினார்
பூ பறித்தாள்
உமி கருக்கினான்
மாலை தொடுத்தாள்
வற்றல் வறுத்தான்
ஓவியம் புனைந்தார்
மாத்திரை விழுங்கினான்
கூடை முடைந்தார்
அம்பு எய்தார்
நூல் நூற்றார்
செய்யுள் இயற்றினார்
உணவு சமைத்தார்
தயிர் கடைந்தாள்
உப்புமாக் கிளறினார்
பால் காய்ச்சினாள்
சிற்பம் செதுக்கினார்
கூரை வேய்ந்தார்
பறவை - விலங்குகளின் இளமைப் பெயர்கள்
கோழிக் குஞ்சு
நாய்க் குட்டி
கிளிக் குஞ்சு
புலிப் பறழ்
அணிற் பிள்ளை
சிங்கக் குருளை
கீரிப் பிள்ளை
யானைக் கன்று
பசுவின் கன்று
தாவர உறுப்புகளின் மரபுப் பெயர்கள்
வேப்பந்தழை
தாழை மடல்
ஆவரங் குழை
முருங்கைக் கீரை
நெல் தாள்
தென்னங் கீற்று
வாழைத் தண்டு
கம்பந் தட்டு (திட்டை)
கீரைத் தண்டு
சோளத் தட்டு (தட்டை)
பறவை - விலங்குகளின் இருப்பிடம்
கோழிப் பண்ணை
கறையான் புற்று
குருவிக் கூடு
ஆட்டுப் பட்டி
சிலந்தி வலை
மாட்டுத் தொழுவம்
எலி வளை
குதிரைக் கொட்டில்
நண்டு வளை