India Languages, asked by mdharun180962, 6 months ago

மரபு பிழையை நீக்கி எழுதுக அ.பழம் உண்டு பால் குடித்தான். ஆ.காகம் கத்த மயில் கூவியத​

Answers

Answered by ItzMissGenius
38

Answer:

(அ) பழம் உண்டு பால் பருகினான்

(ஆ) காகம் கரைய மயில் அகவியது

Answered by sarahssynergy
8

அ. பழம் உண்டு பால் பருகினான்

ஆ. காகம் கரைய மயில் அகவியது

Explanation:

  • மரபு சொற்கள் என்பது வழி வழியாக நம் முன்னோர்கள் வழங்கிய சொற்களைக் குறிக்கும். உதாரணத்திற்கு,   "பால் குடித்தான்” எனக் கூறுவது வழக்கம். "பால் பருகினான்" என்பதே உரிய மரபுத் தொடர்ச் சொல் ஆகும்.
  • மரபு சொற்கள் பெரும்பாலும் 5 வகைப்படும், அவை ஒலி மரபு வினை மரபு ,இருப்பிடம்  தாவர உறுப்பு,இளமைப் பெயர்கள்.
  • இவை ஐந்திலும் ஏற்படும் பிழைகளை நீக்குவதே மரபு பிழை நீக்கம் எனப்படும்.

அ.பழம் உண்டு பால் குடித்தான்:

  • இதில் "பால் குடித்தான்"என்பது வழக்கம் "பால் பருகினான்"என்பதே மரபு.
  • மரபு பிழை நீக்கம் : பழம் உண்டு பால் பருகினான்.

ஆ.காகம் கத்த மயில் கூவியது.

  • இதில் " காகம் கத்தும்,மயில் கூவும்" என்பது வழக்கம். ஆனால் "காகம் கரையும்,மயில் அகவும்"என்பதே மரபு
  • மரபு பிழையை நீக்கம் : காகம் கரைய மயில் அகவியது.
Similar questions