திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்.
Answers
தென்னிந்திய மக்களைக் குறிக்க 'திராவிடர்' என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் இராபர்ட் கால்டுவெல்(1856)
குமரிலபட்டர்
இந்தியமொழிக் குடும்பங்கள்:
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் “இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள்” என அடக்குவர். நம்நாட்டில் 1300க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளைமொழிகளும் பேசப்பட்டு வருகின்றன.
மொழிகளின் காட்சிசாலை
மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சிசாலை” எனக் குறிப்பிட்டுள்ளார். திராவிட மொழிக் குடும்பங்கள் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள். தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளாதெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பொங்கோ, ஜதபுகுரூக், மால்தோ, பிராகுய் திராவிட பெரு மொழிகள்.
திராவிடம்
திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும். திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு எனும் பொருளைத் தரும். திராவிடம் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் குமரிலபட்டர். திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல் கூறியுள்ளார். கால்டுவெல் திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.